நீண்ட வருடங்களுக்கு பின்னர் சூச்சி லீக்ஸ் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பாடகி சின்மயி..!
கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது சின்மயி முன்வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள், தமிழ் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டு குறித்து வழக்கம் போல், வீடியோவில் பதில் சொன்னார்.
பாடகி சினமயி வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பலரும் ஆதரவாக இருந்து வந்தாலும், ஒரு சிலர் சின்மயி குறித்து மோசமான மொழியில் ட்வீட் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு பின்னணி பாடகி சுசித்ரா, சூச்சி லீக்ஸ் என்ற பெயரில் பல பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
சுசி லீக்சில் சிக்கிய பிரபலங்களில் பாடகி சின்மயியும் ஒருவர்! ஆனால், சுசி கூறிய குற்றச்சாட்டை மறுத்தார் சின்மயி.
இந்நிலையில் தற்போது வைரமுத்து மீது சின்மயி குற்றச்சாட்டை முன் வைத்ததும், மீண்டும் சுசிலீக்ஸை சிலர் தோண்டி எடுத்து சின்மயியை கைநீட்டினர். இந்நிலையில், ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு, அதில் சுசியின் கணவர் கூறிய டிவிட்டையும் இணைத்து தான் உண்மை வெளிவந்ததற்காக சந்தோஷப் படுவதாக கூறியுள்ளார் சின்மயி.