சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிம வள பிரிவிலிருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று மாவட்டங்களிலும் 4 ஆயிரத்து 500 தனியார் தண்ணீர் லாரிகள் இயங்கவில்லை. இதனால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வணிக வளாகங்கள், தனியார் தங்கும் விடுதிகள், உணவகங்கள், கட்டுமானப் பணிகள் போன்றவற்றுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.




