2 கொலை வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சாமியார் ராம்பாலுக்கு, ஆயுள் தண்டனை விதித்து, ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹரியானா மாநிலம் பர்வாலா என்ற இடத்தில் சாமியார் ராம்பால் ஆசிரமம் நடத்தி வந்தார். கடந்த 2014ஆம் ஆண்டில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை கொலை செய்யப்பட்டது தொடர்பாக ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நவம்பர் 2018-ல் ஒரு பெண் அவரது ஆசிரமத்தில் இறந்து கிடந்தது தொடர்பாகவும் ராம்பால் மற்றும் அவர் ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்த கொலை வழக்குகளை விசாரித்த ஹரியானா மாநிலம் ஹிசார் நீதிமன்றம், சாமியார் ராம்பால் குற்றவாளி என கடந்த வாரத்தில் அறிவித்தது. இன்று இந்த வழக்கில் தண்டனை விவரத்தை அறிவித்த நீதிமன்றம், சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது
Popular Categories




