சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், புதிய குடிநீர் இணைப்புகளுக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருக்கிறார். இந்த திட்டத்தை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இந்த இணையதள வழி சேவையின் மூலம், விண்ணப்பதாரர்கள், தங்கள் இருப்பிடத்திலிருந்தே விண்ணப்பங்களை பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல், மற்றும் இணைப்புகள் பெறும்வரை விண்ணப்பத்தின் நிலையை கண்காணித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகருக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்போர், தங்களுக்கு புதிய குடிநீர் இணைப்புத் தேவைப்பட்டால், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளமான, www.https://www.chennaimetrowater.tn.nic.in-ல் விண்ணப்பிக்கலாம்.முதற்கட்டமாக, இரண்டு மாடி வரை உள்ள கட்டிடங்களுக்கும், இணையழி மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari