வரும் 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை 60 சதவீதமாக அதிகரிக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் நவம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் உலக அளவிலான கம்ப்யூட்டர் சயின்ஸ் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கே.பி.அன்பழகன், மாநாடு தொடர்பான வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை பறக்கவிட்டார். பின்னர், விழா மேடையில் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது உயர்கல்வி கற்போரின் சதவீதம் 48 புள்ளி 6 ஆக இருப்பதாக கூறினார்.
வரும் 2020ஆம் ஆண்டு உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கையை 30 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருப்பதாகக் கூறிய அவர், மத்திய அரசின் சிறந்த முதல் 50 பல்கலைக்கழகங்களின் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த 20 பல்கலைக்கழகங்கள் இருப்பதாக தெரிவித்தார்.




