கடலூர் ரயில்வே நிலையம் மற்றும் மன்னார்குடி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடி குண்டு நிபுணர்கள் சோதனை-வெடிகுண்டு வைப்பதாக வந்த துண்டு கடிதத்தால் பரபரப்பு
கடந்த விழாக்கிழமை அன்று பகத்ஷீபோதி என்ற இடத்தில் இருந்து மன்னார்குடி விரைவு இரயில் புறப்பட்டது.இந்நிலையில் சென்னை ரயில்வே நிலையத்திற்கு ஒரு துண்டு கடிதம் வந்துள்ளது. அதில் வாராந்திர விரைவு ரயிலை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக ஒரு கடிதம் வந்துள்ளது.
அதன் அடிப்படையில் இன்று கடலூர் வழியாக சென்ற பாராந்திர விரைவு ரயில் மற்றும் ரயில்வே நிலையத்தை வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் ரயில்வே போலிசார் சோதனை மேற்க்கொண்டனர்.
மேலும் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில் எந்த வித வெடி பொருட்க்களும் சிக்கவில்லை.
இச்சோதனையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இரயில் நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது




