நான் பேசியதாக வெளியான குரல் என்னுடையதே அல்ல; இதனை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே அவதூறு பரப்புகின்றனர் என்று கூறியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், என்னை நேரடியாக எதிர்க்க திராணி இல்லாதவர்கள் போலியான ஆடியோவை தயார் செய்து வெளியிட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோ குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், நான் மட்டுமா ஜெயக்குமார் ? இந்த உலகிலேயே டி.ஜெயக்குமார் என நான் ஒருவன் மட்டும் தான் உள்ளேனா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, அமைச்சர் ஜெயக்குமாருக்கு இளம்பெண் ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட கருவைக் கலைக்க அப்பெண்ணின் தாயாருடன் அவர் பேரம் பேசுவதாகவும் ஒரு செல்போன் ஒலிப் பதிவு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் உலா வந்தது. இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அது நான் இல்லை என்று கூறியுள்ளார்.
டி.ஜெயக்குமார் பேசுவதாக குறிப்பிட்டு வைரலான உரையாடல் பதிவு இதுதான்…





