வீட்டு உபயோகத்திற்கான மானியத்துடன் கூடிய சமையல் கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மாதம்தோறும் மாற்றி அமைக்கப்படும் மானிய சிலிண்டரின் விலை தற்போது ரூ.2.94 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் இதன் விலை 502 ரூபாய் 40 காசுகளாக இருந்து இப்போது 505 ரூபாய் 34 காசுகளாக ஆக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ச்சியாக 6 வது முறையாக சமையல் கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதே போன்று மானியம் இல்லாத சிலிண்டரின் விலையும் 60 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. டெல்லியில் இதன் விலை 880 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதன் விலை 896 ரூபாயாக உள்ளது.




