சென்னை: வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது; வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும், இன்று மழை தொடங்கியதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது. வடகிழக்கு பருவமழை இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் தொடங்கியது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று கூறப்படுகிறது. வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைத் தெரிவித்தார். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு பரவலாக மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு முறை இடைவெளி விட்டு மழை பெய்யும். புழல் பகுதியில் 11 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 11 சென்டிமீட்டர் மழை திருவள்ளூர் மாவட்டம் புழலில் பதிவாகியுள்ளது.
கேளம்பாக்கத்தில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பெரியநாயக்கன்பாளையம் பெருந்துறை 9 சென்டிமீட்டர், மாதவரம் அவினாசி ஏழு செண்டி மீட்டர், எண்ணூர், தரமணி ஆறு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
விழுப்புரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது விழுப்புரம் கோலியனூர் முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது




