முன்னாள் அமைச்சர் பெ.ஈஸ்வரமூர்த்தி காலமானார்

 
 
அதிமுக-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பெ.ஈஸ்வரமூர்த்தி (52) உடல்நலக் குறைவால் 21-12-2015 அன்று இரவு காலமானார்.
 
அவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஆகும். ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த இவர் சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார்.
 
இந்நிலையில், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரமூர்த்தி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். அவரது உடலுக்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். இவருக்கு சுஜாதா என்ற மனைவியும், ஜெயசிம்மன், சஞ்சீவ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
 
தாராபுரம் தனித் தொகுதி ஈரோடு மாவட்டத்துடன் இணைந்திருந்தபோது, 1991-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, கதர் மற்றும் கிராமத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடதக்கது.