கவர்னர் சதாசிவத்தை தடுத்த நிறுத்திய கொச்சி விமான நிலைய ஊழியர்கள்

 
கொச்சி விமான நிலைய ஊழியர்கள் கேரள கவர்னர் சதாசிவம் காலதாமதமாக சென்றதால் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கேரள கவர்னர் சதாசிவம் நேற்று இரவு கொச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய இருந்தார். விமான நிலையத்திற்கு வர காலதாமதம் ஆகிவிட்டதால் விமான நிலையம் வந்திருந்த கவர்னர் சதாசிவத்தை விமான நிலைய ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.
 
இதனால் சிறிது நேரம் அங்கு தங்கி விட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சதாசிவம் திருச்சூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து விட்டு வர காலதாமதமாகிவிட்டதாக கவர்னர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 
இது குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது :-
 
கேரள கவர்னர் சதாசிவம் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்வதற்காக இரவு 9.20 மணிக்கு வருவதாக தெரிவித்தனர். ஆனால் 11.40 வரை வராத காரணத்தினால் விமானம் எடுக்கும் சூழ்நிலை உருவாகி விட்டது என்று கூறினர்.
 
தமிழகத்தை சேர்ந்த கவர்னர் சதாசிவம் ஏப்ரல் மாதம் 2014-ம் ஆண்டு கேரள கவர்னராக பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.
 
கொச்சி விமான நிலையத்தில் கவர்னர் சதாசிவத்தை விமான ஊழியர்கள் தடுத்தி நிறுத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.