இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதுவது ஐதராபாத்தா? கொல்கத்தாவா?

17 May24 ipl 2 - 2026ஐ.பி.எல். போட்டியில் ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 25 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி ‘குவாலிபையர்2’ ஆட்டத்துக்கு முன்னேறியது. இந்த தோல்வி மூலம் ராஜஸ்தான் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், ‘குவாலிபையர்2’ ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்-தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்சுடன் மோதும். தோல்வி அடையும் அணி வெளியேறும்.

ஐதராபாத் அணி கொல்கத்தாவை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. அந்த அணி ஏற்கனவே ‘லீக்’ ஆட்டத்தில் கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் 5 விக்கெட்டில் வீழ்த்தி இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. ஐதராபாத் அணியில் கேப்டன் வில்லியம்சன், தவான், மனீஷ் பாண்டே, யூசுப்பதான், பிராத்வெயிட், ரஷீத்கான், சித்தார்த் கவுல், புவனேஷ்வர் குமார் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

ALSO READ:  FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. இந்த அணி ஐதராபாத்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்தது. மேலும் உள்ளூரில் ஆடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமே. கொல்கத்தா அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக், கிறிஸ்லின், சுனில் நரீன், ஆந்த்ரே ரஸ்சல், உத்தப்பா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு நுழைய கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories