‘விஜய்’யின் சர்கார் செய்திகள்: ‘அதையெல்லாம்’ நீக்கலைன்னா… கடும் நடவடிக்கைதான்! மிரட்டும் கடம்பூர் ராஜூ!

சற்றுமுன் சினி நியூஸ் தமிழகம் லைஃப் ஸ்டைல்

kadamburraju - 2026

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி, அவற்றை நீக்கவில்லை என்றால்… கடும் நடவடிக்கை எடுக்க முடிவு எடுப்போம் என்று நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது…

சர்கார் படத்தில் ஜெயலலிதாவின் இயற்பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்தும், இலவச திட்டங்களுக்கு எதிரான வசனங்கள் குறித்தும் செய்தியாளர்களிடம் தன் கோபத்தையும் வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. அப்போது அவர், வளர்ந்து வரும் நடிகரான விஜய்க்கு இது நல்லது அல்ல என்று எச்சரித்தார்.

அரசை விமர்சிக்கும் வகையில் காழ்ப்புணர்ச்சியுடன் சர்கார் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது; அதைக் கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றார் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்! மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு இலவசங்களை வழங்கி வருகிறது என்று கூறினார் அன்பழகன்.

சர்கார் படத்தில் பயன்படுத்தியுள்ள சில வசனங்கள், ஏழை மக்களை சீண்டுவதாக உள்ளது என்று கூறியுள்ளனர் அமைச்சர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.