ராங்கா கொடுத்த மெசேஜ்… சர்காருக்கு தொடரும் நெருக்கடி! கடம்பூராருடன் எடப்பாடியார் ஆலோசனை!

சற்றுமுன் சினி நியூஸ் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

vijay sarkar - 2026

சர்கார் திரைப்பட சர்ச்சை விவகாரம் தொடர்பாக, அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

சர்கார் திரைப்படத்தில் கொடுக்கப்பட்ட ராங்கான மெசேஜால், அரசின் விலையில்லா திட்டங்கள் குறித்த தவறான கருத்து மக்களிடம் சென்று சேர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சர்ச்சை தொடர்பாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு இன்று காலை வந்திருந்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. அவர்கள் இருவரும் சுமார் 20 நிமிடங்கள், இந்த பிரச்னை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

அந்த ஆலோசனையின் போது, சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துரைத்தாராம். மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சர்கார் படக்குழு முன்வந்துள்ள தகவலையும் முதலமைச்சரிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ எடுத்துரைத்ததாகக் கூறப் படுகிறது.

தற்போது அதிமுக., மற்றும் ஆளும் அரசுடன் பிரச்னையைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது சர்கார் படக்குழு. குறிப்பாக, விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் என அதிமுக.,வினரின் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.