spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: பொம்மலாட்டம்!

திருப்புகழ் கதைகள்: பொம்மலாட்டம்!

- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் பகுதி – 279
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஒருவரையும் ஒருவர் – சுவாமி மலை
பொம்மலாட்டம்

இத்திருப்புகழில் இடம்பெறும் உலையில் இடு மெழுகு அது என வாடி, முன்செய் வஞ்சனையாலே, ஒளிபெறவெ எழுபு மர பாவை துன்றிடும் கயிறு விதம் என மருவி ஆடி என்ற வரிகளில் பொம்மலாட்டக் கலை பற்றி அருணகிரியார் குறிப்பிடுகிறார். கலைகளின் தாயகமாய் திகழ்வது தமிழ்நாடு. அப்படி கலாசாரத்திலும், மரபிலும் முன்னோடியாக திகழும் தமிழகத்திற்கு என்று எப்போதுமே ஒரு தனி அடையாளம் உண்டு. அந்த அடையாளங்களில் ஒன்றுதான் பொம்மலாட்டம்.

மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் காலம் காலமாய் பொம்மலாட்டத்திற்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. உலகில் இன்று பல்வேறு நாடுகளில், பல்வேறு பெயர்களில் பொம்மலாட்டத்தை கண்டுகளித்து வருகிறார்கள். இருப்பினும் நாகரிகத்தின் பெயரால் நலிவடைந்து கொண்டிருக்கும் கலையான பொம்மலாட்டத்தின் வரலாறுதான் என்ன?

சீனாவில்தான் பொம்மலாட்டம் தோன்றியது எனச் சீனர்கள் கூறுகிறார்கள். சீனர்களுக்கும் நமக்கும் எல்லைத் தகராறு மட்டும் அல்ல, கலைத் தகராறும் உள்ளது என நாம் இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். சிலப்பதிகாரத்தில் பொம்மலாட்டம் பற்றிய குறிப்புகள் உள்ளது. இது சும்மார், 2300 ஆண்டுகள் பழமையானது.

இன்றைய அனிமேஷன் படங்களுக்கு, பொம்மலாட்டம் ஒரு முன்னோடி என்று சொல்லலாம். கதாபாத்திரங்கள் பேசுவது, காதலிப்பது, சண்டை இடுவது எல்லாம் பொம்மலாட்டம் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டனர் நம் தமிழர்கள். இது கூத்து வகையைச் சேர்ந்தது. மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி, திரைக்குப் பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கதை சொல்லிகளின் ஒரு சுவையான கலை பொம்மலாட்டம். இது பாவைக்கூத்து, மரப்பாவைக்கூத்து, என்ற பெயர்களாலும், தோல் பொம்மலாட்டம், மரப்பொம்மலாட்டம் என இரண்டு வகையிலும் நிகழ்த்தப்படுகிறது பொம்மலாட்டம்.

பெரும்பாலும் பொம்மலாட்டத்தில் இதிகாசமும், புராணக் கதைகளும், சரித்திரக் கதைகளுமே அதிகம் நிகழ்த்தப்படும். குறிப்பாகத் தமிழகத்தில், அருணகிரி நாதர் வரலாறு, சிறுத்தொண்ட நாயனார் கதை, சீதா கல்யாணம், பக்த பிரகலாதன், ஆண்டாள் கல்யாணம், அரிச்சந்திரன் கதை, வள்ளி திருமணம் ஆகியன நிகழ்த்தப்படுகிறது. திருமகள் என்ற பெண் பொம்மலாட்டம் நிகழ்த்தி அசுரர்களையும், பேய்க் கூட்டங்களையும் விரட்டினார் என்பது வாய்மொழியாக விளங்கும் ஒரு புராண கதையாகும்.

அண்மைக் காலத்தில் பொம்மலாட்டத்தை மக்களிடையே பரப்பிய பெருமை திரு கமலஹாசன் அவர்கள் நடித்த தசாவதாரம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை இங்கே குறிப்பிட வேண்டும். முகுந்தா முகுந்தா எனத் தொடங்கும் அந்தப் பாடல் பொம்மலாட்டம் எப்படி நிகழ்த்தப்படுகிறது என்பதை நமக்குக் காட்டியது. அப்பாடலின் சில வரிகள்

மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னை காத்தாய்

கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்

வாமணன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய்

நரன் கலந்த சிம்மமாகி ஹிரணியனை கொன்றாய்

ராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய்

கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்

என்ற வரிகளில் திருமாலின் பத்து அவதாரத்தையும் பொம்மலாட்டம் மூலமாகக் காண்பிப்பார்கள். சிறு குடங்களால் இராவணனைக் காட்டியிருப்பார்கள்.

பொம்மலாட்டத்தில் மொத்தம ஒன்பது கலைஞர்கள் வரை இருப்பார்கள். இவர்களில் நான்கு கலைஞர்கள் பொம்மைகளை இயக்கவும், மற்ற நான்கு கலைஞர்கள் இசைக்கலைஞர்களாகவும் இருப்பார்கள். ஒருவர் இவர்களுக்கெல்லாம் உதவியாளராக இருப்பார். பெரும்பாலும் ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், ஜால்ரா முகவீணை ஆகிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்படும்.

தற்போது சிலர் மின் இசைக்கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். நான்கு மீட்டர் அகலம், ஆறு மீட்டர் நீளம், மூன்று மீட்டர் உயரம் கொண்ட மூன்று புறங்கள் அடைக்கப்பட்ட அரங்கில் மரபின் திரிபுகள் கெட்டுவிடாது இந்தக் கலை நிகழ்த்தப்படும். அரங்கின் வலதுபுறத்தில் இசைக்கலைஞர்கள் அமர்ந்திருப்பார்கள்.

முன்புறத்தில் ஒரு மீட்டர் அளவுக்கு இடைவெளி விட்டு கறுப்புத் திரைச்சேலை ஒன்றும் கட்டப்பட்டிருக்கும். இந்தத் திரை, பின்னால் நின்று கொண்டிருக்கும் பொம்மலாட்ட கலைஞர்களின் தலையை மறைக்கும் அளவுக்கு உயரமாக இருக்கும். பொம்மைகள் தொங்குவதற்கான கயிறுகள் கறுப்புத் திரையின் மேல் கட்டப்பட்டிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe