
சேனைக்கிழங்கு மசியல்
தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு – அரை கிலோ (தோல் சீவி, பெரிய துண்டுகளாக்கவும்) எலுமிச்சைச் சாறு – 5 டீஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
பூண்டு – 3 பல் (தட்டவும்)
கறிவேப்பிலை – சிறிதளவு
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கீறிய பச்சை மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப)
சோம்பு, சீரகம் – அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சேனைக்கிழங்குடன் மஞ்சள்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்து வடித்து எடுக்கவும். ஆறிய பிறகு கையால் நன்கு மசிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு, சீரகம் தாளிக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மசித்த கிழங்கு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, எண்ணெய் பிரிந்துவரும் வரை வதக்கவும் (மசியல் வெந்ததும் பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும். அதுவே தயாரான பக்குவம்). கடைசியாக எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி இறக்கவும்.





