பீப் பாடல் பிரச்சனை : நடிகர் சிம்புக்கு அதரவாக ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டி

 

நடிகர் சிம்புக்கு ஆதரவாக அவருடைய ரசிகர்கள் சார்பில் திண்டுக்கல்லில் நேற்று சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு பாடியதாக சமீபத்தில் பீப்… பீப்… பாடல் ஒரு இணையதளத்தில் பீப் பாடல் வெளியானது.

அந்த பாடலில் ஆபாசமான வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து கோவை, சென்னையில் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே சிம்பு பாடிய பாடலை யாரோ திருடி இணையதளத்தில் வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடிகர் சிம்புக்கு ஆதரவாக அவருடைய ரசிகர்கள் சார்பில் திண்டுக்கல்லில் நேற்று சுவரொட்டிகளை ஒட்டி இருந்தனர். அதில் சிம்புவின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் பீப் பாடலை வெளியிட்ட கும்பலை வன்மையாக கண்டிக்கிறோம் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. திண்டுக்கல்லில் மாவட்ட இணை ஆட்சியர் அலுவலகம்,
பேருந்து நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அலுவலக சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. சிம்பு ரசிகர்கள் ஒட்டிய அந்த சுவரொட்டி திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.