நடிகர் மற்றும் இசை அமைப்பாளரான ஜிவி பிரகாஷ்குமார் இந்திய கிரிக்கெட் அணிக்காக பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்தப் பாடல் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்கும் முதல் போட்டியான நேற்று அறிமுகம் செய்யப்பட்டது! இது ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது!
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 5-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. மேலும் 5 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இவை தவிர சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று, தனுஷ் நடிப்பில் அசுரன் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.
இந்தப் பணிகளுக்கு இடையே ‘மகத்தான மனிதர்கள்’ என்ற பெயரில் அதிகம் வெளியில் தெரியாத சமூக சேவகர்களை யூடியூபில் அடையாளப்படுத்த இருக்கிறார்.
சினிமா மற்றும் சமூக பணிகளுக்கு இடையே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டுள்ள இந்திய அணியின் வெற்றிக்காக ஒரு ஆன்தம் பாடலை உருவாக்கி இருக்கிறார்.
முன்னதாக இந்தப் பாடலின் சில வரிகள் கொண்ட புரோமோ சமூக வலைதளங்களில் டிரெண்டானது.
????????It is time to cheer Team India at the #CricketWorldCup.
Glad to have worked with @StarSportsTamil for this tribute for Namma Team India. Let us bring back the @cricketworldcup.
Tune in to SS Tamil at 2PM on 5th June to watch the full song. #CricketOdaCrown @StarSportsIndia pic.twitter.com/YhhkR7EBiP
— G.V.Prakash Kumar (@gvprakash) June 3, 2019




