அதிமுக நடத்தும் தமிழக அரசாங்க ஆட்சியில் ரூ. 4.20 லட்சம் கோடி கடன் : மருத்துவர் ராமதாஸ்

 
 
அதிமுக நடத்தும் ஆட்சியில் தமிழக அரசாங்கம் ரூ. 4.20 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .
 
தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை நேற்று பார்வையிட்ட ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது : –
 
தமிழகத்தில் தற்போது தேர்தல் நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. இது பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வரை நடக்கும். இதனை நீங்களும், நாங்களும், மக்களும் ரசிக்கலாம். அன்புமணியை முதல்வராக ஏற்றுக்கொண்டு, பாமகவுடன் கூட்டணி அமைக்க பாஜக வரும் என நம்புகிறோம். அப்படி வந்தால் துணை முதல்வர் பதவி அவர்களுக்கு வழங்குவோம். தமிழகத்தில் 5 அணிகள் இருக்கும். திமுக, அதிமுக, இதற்கு மாற்றாக பாமக, அதற்கு பிறகு மற்ற கூட்டணிகள் வரும்’
முன் எப்போதும் இல்லாத அள வுக்கு அதிமுக ஆட்சியில் கடன் வாங்கப்பட்டுள்ளது. ரூ. 4.2 லட்சம் கோடி கடன் உள்ளது. எளிதாக சொல்ல வேண்டுமானால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையை அடமானமாக வைத்து ரூ. 60 ஆயிரம் வரை கடன் பெற்று ஆட்சி நடத்துவதாக தெரிவித்தார் .
 
சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், கடலூர், மாவட்டங்களைப் போல் தூத்துக்குடியும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. மோட் டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப் பட்டபோதும், அது எங்கே செல்கிறது என்று அதிகாரிகளுக்கே தெரிய வில்லை. தூத்துக்குடி மாநகராட்சியின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது.
 
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புக்கு ஆளும் கட்சி யினரே காரணம். ஏரி, குளங்கள், வரத்து கால்வாய்கள் திமுக மற்றும் அதிமுக ஆட்சியின்போது ஆக்கிரமிக்கப்பட்ட தும் முக்கிய காரணம்.
 
பொதுவாக குடிசைகள்தான் வெள் ளத்தில் மூழ்கும். தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமே வெள் ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.
 
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தான் குடி மராமத்து பணி நடைபெற்றது. அதற்கு பிறகு இப்பணிகள் நடக்கவில்லை. ஏரி, குளங்கள் உடையும் நிலையில் இருந்தால், ஊர்மக்கள் சென்று அடைப்பார்கள், இன்று ஒப்பந்ததாரர்களால் பணிகள் செய்யப்படுகின்றன. மக்கள் இதை வேடிக்கை பார்க்கின்றனர். இதில் மக்களுக்கு ஆர்வம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது
என்று ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .