ஊடக துறையினர் முகத்தில் காறி துப்பி கீழ்த்தரமாக நடந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்

 
 
சென்னை மத்திய கைலாஷில் இன்று செய்தியாளர்களிடம் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பத்திரிகைகாரங்களா நீங்க தூ என முகத்தில் காறித்துப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
 
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த் கூட்டணியில் தேமுதிக இருப்பதாக கூறுபவர்கள் கூறிக்கொண்டே இருக்கட்டும். கூட்டணிக்கு வருமாறு அழைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
 
தேர்தல் கூட்டணி பற்றி முடிவு செய்ய காலம் இருக்கிறது. தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கப்படும். அதிமுகவின் 37 எம்பிக்கள் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் என்ன செய்தார்கள்.
 
2016ம் ஆண்டு தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்காது. கலைஞர், ஜெயலலிதாவை சமூக வலைதளங்களில் மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்றார்.
 
இச்சந்திப்பின் போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த். அப்போது 2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க, ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்க முடியாது;
 
இந்த கேள்வியை நீங்க ஜெயலலிதாகிட்ட போய் கேட்க முடியுமா? கேட்கவே மாட்டீங்களே… பயப்படுவீங்க. பத்திரிகைகாரங்களா நீங்க..த்தூ…என்று துப்பினார்.
 
ஊடக துறையினர் சந்திப்பில் பகிரங்கமாக விஜயகாந்த் காறி துப்பிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
 
இந்திய அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டு, அதில் அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மதிப்போம் என்று உறுதிமொழியேற்று, “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கும் விஜயகாந்த், பத்திரிகையாளர்களை மிரட்டி பணிய வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தை அவர் கண்ணியக்குறைவாக மதிக்கத்தவறியுள்ளார் என ஊடக துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.
 
பல்வேறு பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஊடக துறை சார்ந்த சங்க அமைப்புகள் வன்மையாக கண்டிக்கின்றனர்.
 
ஊடக துறையினர் சந்திப்பில் பகிரங்கமாக விஜயகாந்த் காறி துப்பிய சம்பவ காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
COURTESY & VIDEO SOURCE : puthiyathalaimurai.tv