விஜயகாந்த்தால் அதிமுகவினரிடம் தர்மஅடி வாங்கிய தேமுதிகவினர். !

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தஞ்சாவூரில் இன்று ஜெயலலிதா படத்தை கிழிக்க கட்சியினருக்கு உத்தரவிட பதிலடியாக தேமுதிக பேனர்கள், கொடிகளை அதிமுகவினர் எரித்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 
ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த், டெல்டா மாவட்ட விவசாயிகளை அதிமுக அரசு புறக்கணிக்கிறது; மீத்தேன் திட்டத்துக்கு காரணமே கருணாநிதி அரசுதான் என்று வழக்கம்போல குற்றம் சாட்டினார் .
 
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் என்ற மரியாதைக்குரிய பொறுப்பு வகித்தாலும் அதற்கு மரியாதை அளிக்காமல் வாய்க்கு வந்தபடி பேசுவது, அடிப்பது, அநாகரிகமாக நடந்து கொள்வது என நிதானமற்ற நிலையில் உச்சத்தில் செயல்படுகிறார் விஜயகாந்த்.
 
இதனால்தான் விஜயகாந்த் சென்னையில் பத்திரிகையாளர்களை த்தூ…. என காறி துப்பினார்.
 
இதேபோல் இன்று தஞ்சாவூரில் மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
கலந்து விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்தார்.
 
அப்போது திடீரெனமன நிலைதடுமாறி, பேருந்து நிறுத்தத்தில் ஒரு ஜெயலலிதா படம் இருக்கிறது.. அதை கிழிங்கடா என தேமுதிகவினருக்கு உத்தரவிட்டார்.
 
தேமுதிக தொண்டர்கள் .உடனடியாக அந்த படத்தை கிழித்து எறிந்தனர். ஜெயலலிதா படத்தை கிழித்த செய்தியை கேள்விபட்ட அதிமுகவினர் அங்கு திரண்டு தேமுதிகவின் ஆர்ப்பாட்டத்துக்கான பேனர், கொடிகள் அனைத்தையும் தடுக்க வந்த காவல் துறையினரை விரட்டிவிட்டு ஒன்றுவிடாமல் தேமுதிக கொடிகளுக்கு கிழித்து தீ வைத்து எரித்தனர்.
 
இதனிடையே ஜெயலலிதா படம் கிழிக்கப்பட்ட செய்தி காட்டுத் தீயாக பரவ, கும்பகோணத்தில் தேமுதிகவினர் சென்ற வாகனத்தை அதிமுகவினர் வழிமறித்து தாக்குதல் நடத்தினர். இதில் 20க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் படுகாயமடைந்தனர்.
 
 
இதனால் தஞ்சாவூரில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூரில் விஜயகாந்த் இருக்கும் நிலையில் அவருக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தி அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.