
கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு சபரிமலைக்கு செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்து கொண்டனர்.
ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியன்று சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மணி அணிந்து கொண்டு கடுமையான விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று தாறு தங்களுடைய நேர்த்திக் கடனைச் செலுத்தி வருவார்கள்.
இந்தாண்டு கார்த்திகை மாலை அணிந்து கொள்ளும் நிகழ்வு, இன்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகாதீபாராதனை காட்டப்பட்டது.
அதிகாலை முதலே சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு குருசாமி கனகசபாபதி மலை அணிவித்தார். மேலும் கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கம் சார்பில் வரும் 22ம் தேதி முதல் 26 ம் தேதி வரை சிறப்பு விழா நடைபெறவுள்ளது.
அதுசமயம் இந்தாண்டு குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்காக ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம் நடைபெறவுள்ளது.