
வலிக்காமல் செய்வதில் தான் நான் பேமஸ்’ எனக் கூறிக் கொண்டு, டாட்டூ போட வரும் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து அதனை யூடியூபில் பதிவேற்றி காசு பார்த்து வருகிறான் இந்த சேட்டை ராஜேஷ்.
உலகெங்கிலும் பரவலாக காணப்பட்ட பச்சைக்குத்துதல் எனும் கலாசாரம், தற்போதைய நவீன யுகத்தில் டாட்டூ என புதிய அவதாரம் எடுத்துள்ளது.

டாட்டூவில் உள்ள விதவிதமான டிசைன்கள், வண்ணங்கள் மூலம் இளம் யுவதிகள் தங்களை மேலும் மெருகேற்றி அழகாக காட்டி கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.
இளையோர் மத்தியில் டாட்டூ கலாச்சாரம் தீயாகப் பற்றி எரிய, வழக்கம்போல கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பிரபலங்களே காரணமாக இருக்கிறார்கள்.

இந்த சூழலில், இளம் பெண்களுக்கு டாட்டூ மீதுள்ள காதலை காசாக்க கணக்கு போட்ட ராஜேஷ், டாட்டூ போடுவதை படம் பிடித்து யூடியூபில் பதிவேற்றி தனது சேட்டையை தொடங்கியுள்ளான்.
சென்னை முகப்பேரில் H2O டாட்டூ ஸ்டுடியோ வைத்துள்ள ராஜேஷ், ஆரம்பத்தில் தனது தொழிலுக்கு விளம்பரம் தேட வீடியோ பதிவு செய்த நிலையில், காலப்போக்கில் வியூவ்ஸ் மற்றும் பணத்திற்காக இரட்டை அர்த்த காமெடிகள் செய்வது, ஆபாசமாக பேசுவது மற்றும் இளம் பெண்கள் தங்களது உடலின் அந்தரங்கப் பகுதிகளில் டாட்டூ குத்தி கொள்வதை படம் பிடித்து, அதனை யூடியூபில் பதிவேற்றுவது என தனது லீலைகளைக் காட்டியுள்ளான்.
சின்னஞ்சிறு குழந்தைகளும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் இன்றைய காலத்தில், அவற்றுள் பெரும்பாலானோர் யூடியூபை உபயோகிக்கின்றனர்.

இந்த சூழலில், ஆபாசமான கோணங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்களை, மேலும் அறுவறுப்பை ஊட்டும் வகையில் எடிட்டிங் செய்து, அவற்றை யூடியூபில் பதிவேற்றி வருகிறான் இந்த சேட்டை ராஜேஷ்.
சமீபத்தில் மதனை கைது செய்த போலீசார், சேட்டை ராஜேஷுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது



