தேர்தலில் இணைய தளம் மூலம் ஓட்டுப்பதிவு : அரசு திட்டம்

 

வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே இணைய தளம் மூலம் வாக்களிக்கும் முறையை இந்தியாவிலேயே முதன் முறையாக கடந்த 2010–ம் ஆண்டு குஜராத் மாநில அரசு அறிமுகம் செய்தது.

குஜராத்தில் சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் இணைய தளம் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

குஜராத்தில் உள்ள சுமார் 96 லட்சம் வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் இணைய தளம் மூலம் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 806 பேர் இணையத்தளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் தங்கள் வாக்கை பதிவு செய்திருந்தனர். இதனால் அப்போது இணையத்தள வாக்குப்பதிவு முறைக்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை.

என்றாலும் இணையத்தளத்தின் மூலம் வாக்கை பதிவு செய்யும் நடைமுறையை தொடர குஜராத் மாநில அரசுதிட்டமிட்டு நடைபெறவுள்ள பஞ்சாயத்துத் தேர்தல்களிலும் இணையத்தளத்தின் வாயிலாக ஓட்டுப்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்பகுதிகளில் இருப்பவர்களே இணையத்தளத்தின் வாயிலாக வாக்களிப்பை விரும்பாத நிலையில் இருந்த போதிலும் எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்பதில் கேள்வி நீடிக்கிறது. கிராம மக்கள் இதில் ஆர்வம் காட்டுவார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில்
கிராம மக்களில் எத்தனை சதவீதம் பேர் இணையத்தள வசதி பெற்றுள்ளனர் என்ற ஆய்வையும் குஜராத் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது .