புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். சாலை ஓரத்திலும் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் வீடு வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாத புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து பேசிய அவர் மதுவிலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார். மேலும் குடிசை இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.



