இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே இன்று காலை கைது செய்யப்பட்டார்.
மாத்தறை பகுதியில் நிலப் பிரச்சனை தொடர்பான சர்ச்சை
ஒன்றில் விசாரணைக்கு நேரில் வந்த அவரை போலீசார் கைது செய்தனர் என கொழும்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிதிமோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவருக்கு பின்னர் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்த நிலையில் அவர் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசில் ராஜபக்சே, இலங்கையின் முன்னள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.



