தமிழ்நாட்டில் 12 ஸ்மார்ட் நகரங்கள் : தமிழக அரசு மத்திய அரசிடம் திட்டம் தாக்கல்

 
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான ஸ்மார்ட் நகர திட்டத்தை ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்க வேண்டிய ஸ்மார்ட்நகரங்களின் எண்ணிக்கையை மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்க்கு அரசு ரூ.48 ஆயிரம் கோடி செலவிட மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கி உள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் 12 ‘ஸ்மார்ட்’ நகரங்களை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. இந்த நகரங்களை அடையாளம் கண்டு, டிசம்பர் 15-ந் தேதிக்குள் தெரிவிக்குமாறு தமிழக அரசை கேட்டிருந்தது.
இந்த நிலையில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு ஸ்மார்ட் நகரங்கள் தொடர்பான அறிக்கையைஅளித்துள்ளது.
 
ஸ்மார்ட் சிட்டி எனப்படும் நவீன நகரங்கள் பட்டியலில், தமிழகத்தில் திருச்சி, நெல்லை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர், சேலம், வேலூர், கோவை, மதுரை, ஈரோடு தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய 12 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த பேய் மழை, வெள்ள நிவாரண பணிகள் காரணமாக ‘ஸ்மார்ட்’ நகரங்கள் திட்ட பட்டியலை மத்திய அரசிடம், தமிழக அரசு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது.