பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய விமான படை தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : 3 வீரர்கள் பலி

 
பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் பஞ்சாப் மாநிலத்தின் மீது விமான படை தாக்குதல் நடத்தியதில் 3 வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து டில்லியில் மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில்உயர்மட்ட அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது . விமான படை தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி விவரங்களை கேட்டறிந்தார். மேலும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரித்துள்ளார். இந்த கூட்டத்தில் கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு துறை தேசிய செயலர் அஜித் தோவல் , பாதுகாப்பு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் இன்று அதிகாலையில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர் . பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் விமானப்படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்திய எல்லையில் நுழைந்த பயங்கரவாதிகள், கடல் வழியாக வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது . காவல் கண்காணிப்பாளர் வாகனத்தை கடத்தி சென்று, அதுனை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலில் ஜெய்ஸ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது
புத்தாண்டு தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தக்கூடும் என கடந்த சில நாட்களுக்கு முன்னும் நேற்று பஞ்சாப் மாநில எல்லைக்குள் 4 முதல் 5 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக
உளவுத்துறை எச்சரித்திருந்தது . இதனால் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் இருந்ததால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என விமானப்படை தள அதிகாரிகள் கூறியு ள்ளனர்.