பெருந்துறைமுகம் அமைய மத்திய அமைச்சருக்கு துணை நிற்கும் நுகர்வோர் சங்கம்!

 

       கன்னியாகுமரி மாவட்டத்தில்  குளச்சல் வர்த்தக  பெருந்துறைமுகம் அமைய மாவட்ட மக்கள் அனைவரும் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் எடுக்கும்

அனைத்து முயற்சிகளுக்கும் பொது மக்கள் துணை நிற்க்க  வேண்டு என்று கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததுள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்   தெரிவித்துள்ளதாவது :-

                              இந்தியாவில் 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன. மும்பை, ஜவஹர்லால் நேரு துறைமுகம், கொல்கத்தா, சென்னை, விசாகப்பட்டிணம், கொச்சி, பிரதீப், புதிய மங்களூர் துறைமுகம், மார்கோவா, எண்ணூர், தூத்துக்குடி, கண்ட்லா மற்றும் போர்ட் பிளேயர் ஆகியன மத்திய அரசின் கீழ் உள்ளன. 60 கோடி டன் சரக்குகளை கையாலும் திறமை கொண்டது. மேலும் நாடு முழுவதும் 176 சிறிய துறைமுகங்களும் உள்ளன. 2020ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 350 ஆக உயர்த்த மத்திய அரசு முயற்சி எடுத்து வருகின்றது.

விரிவாக்கம்

                               உலகில் ஒவ்வொரு நாட்டின் தென்கோடியிலும், ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக, தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் துறைமுகம், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் துறைமுகம், சிங்கப்பூரின் சிங்கப்பூர் துறைமுகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம் இந்தியாவின் தென்கோடியில் அமையாததால், இலங்கையின் கொழும்பு துறைமுகம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாகத் திகழ்கிறது. புதிதாக ர்யஅடியவொழவ என்ற புதிய துறைமுகத்தை சீன உதவியுடன் நிர்மானித்துள்ளது. இங்கே சீன கப்பல்படை படகுகள் வரும் நிலை உள்ளது. அல்லாமல் சீன மாலதீவில் நீர்மூழ்கி கப்பல் தளம் அமைக்க உள்ளது. இந்து மகா சமுத்திரத்தில் சீன ஆதிக்கம் செலுத்துவது நமது நாட்டின் பாதுகாப்பிற்க்கு இடையூராக அமையும். குளச்சல் துறைமுகத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவின் தென்கோடியில் அமைந்த சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாக திகழ்வதுடன், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஜப்பான், அரபு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான வர்த்தகம் மிகப்பெரிய அளவில் விரிவடையும்.

மீன்வளம்

                          கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைப் பகுதி 68 கிமீ நீளமுடையது. 45 கடற்கரை கிராமங்கள் உள்ளன. மீனவ மக்கள் தொகை 2001-ன்படி 1,53,514. இங்கு 510 இயந்திர படகுகளும் 12,737 நாட்டுப் படகுகளும் உள்ளன. ஆண்டுக்கு 62,400டன் மீன் உற்பத்தியாகின்றன. இது மாநில அளவில் 25 சதவீதமாகும்.

குளச்சல் துறைமுகம், பன்னெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ள துறைமுகமாகும். இயற்கையாகவே, பெரிய கப்பல்கள் வந்து செல்லும் அளவிற்கு போதுமான ஆழம் கொண்ட இயற்கைத் துறைமுகமாகும். குளச்சல் துறைமுகத்தின் மாபெரும் தனிச்சிறப்பு என்னவென்றால், அது சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதையில் (International Shipping Lane) அமைந்துள்ளது. குமரி மாவட்டத்தில் மீன்பிடித் துறைமுகம் சின்ன முட்டம், முட்டம், ராஜாக்கமங்கலம், தேங்காய்பட்டினம் போன்ற இடங்களில் உள்ளன. இந்த கடற்கரையை அடுத்து கடல் உள்மேடு (Wedge Bank) உள்ளது.

வெட்ஜ் பாங்க் (கடல் உள்மேடு)

                       இங்குள்ள கடல் உள்மேட்டுப் பகுதி முக்கடலும் சேரும் இடத்தில் குமரியின் தெற்கில் 56 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. வடக்கு 70.20’ மற்றும் கிழக்கு  770.52′ பாகைகளில் சுமார் 10000 சதுர கி.மீ பரப்பளவில் 90 மீட்டர் ஆழத்தில் கடல் உயிரிகள் வாழச்சிறந்த சூழலோடு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு கடலில் தங்கியிருந்து மீன்பிடிப்பது சுலபம். மீன்வளமும் அதிகம். குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் அதிக மீன்கள் கிடைக்கும். இந்தப் படகும் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் 34 நாட்டிக்கல்மைல் தொலைவில் உள்ளது. International Board-ல் உள்ளது. நாட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் அளவு அடிப்படையில் 90 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் 70 சதவீதமும் கடல் போக்குவரத்து வாயிலாகவே மேற்கொள்ளப்படுகிறது. ஆக நாட்டில் வர்த்தக மேம்பாட்டில் துறைமுகங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

அமைவிடச் சிறப்பு

                 இதில் குளச்சல் இனயம் கடற்கரை பகுதி தென் தமிழகத்தில் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் உலகிலே மிகவும் அதிக கப்பல் போக்குவரத்து கொண்ட கடற்பாதையில் அமைந்துள்ளது. இந்த கடற்பாதை ஐரோப்பா வளைகுடா நாடுகள், வட ஆப்பிரிக்கா முதலிய நாடுகளிலிருந்து சூயஸ் கால்வாய் வழியாக சீனா, ஜப்பான் மற்றும் பசிபிக் சமுத்திரத்தின் கரையோர நாடுகளுக்கு செல்லும் கடற்பாதையாகும். இந்த கடற்கரை பூகோள ரீதியில் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை துறைமுகங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் மேற்கு பகுதியில் கொச்சி, மங்களூர், மார்கோவா, மும்பாய், காண்டலா துறை முகங்களும், கிழக்கு பகுதியில் தூத்துக்குடி, சென்னை, விசாகபட்டிணம், பரதீப், கொல்கத்தா துறைமுகங்களும் அமைந்துள்ளன. இதன் காரணமாக இந்திய துறைமுகங்களுக்கு நடுநாயகமாக பண்டக மற்றும் சரக்கு பரிமாற்றம் செய்ய தலைச்சிறந்த துறைமுகமாக, குளச்சல் இனயம் பெருந்துறைமுகமாக மாறும் வாய்ப்புகள் மிகச்சிறப்பாக உள்ளன.

இடைநிலை துறைமுகம்

                   மேலும், இந்தியாவின் மேற்குக்கரை துறைமுகங்களிலிருந்து, கிழக்குக் கடற்கரை துறைமுகங்களுக்கு செல்லும், 80% கப்பல்கள், கொழும்பு துறைமுகத்தையே இடைநிலை துறைமுகமாக (Transshipment Port) பயன்படுத்துவதால், கொழும்பு துறைமுகம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குகிறது. அதாவது, இந்தியாவின் மேற்குக்கரை துறைமுகங்கள் இயற்கைத் துறைமுகங்களாகவும், ஆழமான துறைமுகங்களாகவும் இருக்கின்றன. கிழக்குக்கரை துறைமுகங்கள் பெரிய கப்பல்கள் வந்து செல்லும் அளவிற்கு போதுமான ஆழம் கொண்டதாக இல்லை. எனவே, இந்தியாவின் மேற்குக்கரை துறைமுகங்களிலிருந்து கிழக்குக்கரை துறைமுகங்களுக்கு, சரக்குகளை கொண்டு செல்லும் பெரிய கப்பல்கள், கொழும்பு துறைமுகத்தில் அவற்றை இறக்கிவைக்கும். அங்கிருந்து, அச்சரக்குகளை, சிறிய கப்பல்கள் மூலம், கிழக்குக்கரை துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.    தற்சமயம் நம்நாடு, வெளிநாடுகளில் உள்ள கொழும்பு, துபாய் மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களின் உதவியுடன் நமது பொருட்கள் மற்றும் கண்டெய்னர்கள் பரிமாற்றம் செய்து வருகின்றது.

60 அடி ஆழம்

                     சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையிலிருந்து துறைமுகத்திற்கு கப்பல் வரும் பாதை குறைந்த பட்சம் ஆழம் 18மீட்டராவது இருக்கவேண்டும். ஆனால் இனயம் பகுதியில் 60மீட்டர் ஆழம் உள்ளது. பெரிய துறைமுகங்கள் அமையும் கடலில் உள் நீளச்சுவர் (ஜட்டி) கடல் பகுதிக்குள் அமைக்கப்படும் போது சுற்று வட்டாரக் கரைப்பகுதிகள் பாதுகாக்கப்படும்;.

5,00,000 டன்

           நம் நாட்டுத் துறைமுகங்கள் அனைத்தும் ஆழம் குறைந்தவைகள். 1,00,000 டன்களுக்கு குறைவான எடையுள்ள கப்பல்களே இந்திய துறைமுகங்களில் பொருட்கள் ஏற்றி இறக்க முடியும். பண்டக பரிமாற்றம் செய்யும் பெருந்துறைமுகம் ஒன்று இனையத்தில் அமைவது மிகவும் தேவை. இங்கு 5,00,000 டன்களுக்கு மேலான எடையுள்ள கப்பல்களும் வந்து செல்லும், ஆழமும் அதற்கேற்ற அனைத்து வசதிகளும் உள்ளன.

ஆய்வுகளும் அறிக்கைகளும்

                   குளச்சல் கடற்கரையை 1995ம் ஆண்டு இந்தியகடல் போக்குவரத்து வல்லுநர்கள் ஆய்வு செய்து பெருந்துறைமுகமாக மாற்றிட தீர்மானம் நிறைவேற்றினர். 1998-ம் ஆண்டு டெசிட் என்ற துறைமுக அமைப்பு பரிந்துரையும் செய்தது. மேலும் தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் 2001-ம் ஆண்டு மலேசியாவில் துறைமுக அமைப்பு ஆய்வுகள் மேற்கொண்டு சாலைகள், ரயில் பாதை அமைப்பு, சம்பந்தமான மேம்பாடு பரிசோதனை செய்த அறிக்கை தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறையிடம் உள்ளது.

குளச்சல் துறைமுகம் இந்தியாவில் மிகவும் ஆழம் உள்ளதாகவும், கடற்கரையில் இனயம் பகுதியில் 60 மீட்டர் ஆழம் உள்ளதால் இயற்கை துறைமுகம் அமையும் வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுதல், இயக்குதல், ஒப்படைத்தல் திட்டத்தின்படி (BOT system)உலகளாவிய டெண்டர் விட்டு அரசு, தனியார் கூட்டு முயற்சியால் அமைக்கப்படும் திட்டமாக பரிந்துரைக்கப் பட்டுள்ளதுகடந்த 2006ம் ஆண்டு அப்போதைய முதல்வர்.கருணாநிதி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை நேரில் சந்தித்து திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தினார்கள். கழிந்த 18- 07- 2006ம் ஆண்டு முன்னாள் இந்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு அவர்கள் இடத்தை பார்வையிட்டு குளச்சல் சிறு துறைமுகமாக இருப்பதை பெருந்துறைமுகமாக்க கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று நேரில் கூறினார். 18-04-2008 அன்று ஆண்டு மத்திய அரசின் கப்பல்துறை அமைச்சக அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜோதிநிர்மலா அவர்களுடன் ஆலோசனை செய்துவாப்கோஎன்ற மத்திய அரசு நிறுவனம் வாயிலாக குளச்சல் பண்டக பரிமாற்றம் துறைமுகத்திற்கு ஆய்வு மற்றும் திட்ட அறிக்கைகள் மூன்று மாதத்தில் தயாரிப்பதாக அறிவிப்புக்கள் வெளியாகின. ஏனைய மாநிலங்களில் முழு ஆர்வத்துடனும், முழு உற்சாகத்துடனும் பல துறைமுகங்களைக் கட்டி முடித்துள்ளனர். இந்திய கப்பல்துறை முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் அவர்களும் 21.07.2009-ல் இந்த திட்டம் மாநில அரசுதான் செயல்படுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு ஒத்துழைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டம் கூறுவது என்ன?

                  இந்திய துறைமுக சட்டம் 1908-ன் படி சிறிய மற்றும் மைனர் துறைமுகங்களை மேம்படுத்தி பெருந்துறைமுகங்களாக மாற்றிட உள்ள திட்டம் மாநில அரசையே சார்ந்தது. மத்திய அரசு நிறுவனமான சேது சமுத்திர கார்ப்பரேசனிடம் தமிழக அரசு பொறுப்புகளை ஒப்படைத்தது. அதே வேளையில் துறைமுகத்தினை பல்வேறு நிலைகளில் மேம்படுத்துவது தொடர்பாக திருவாளர்கள் மேரிடைம் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்திடம் இருந்தும் அறிக்கை அரசு பெற்றள்ளது. 2011-ம் ஆண்டு தமிழக அரசு அதிகாரிகள் TANGED Co வாயிலாக இடத்தை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் துறைமுகத்தில் திரவ பெட்ரோலிய ஏற்றுமதி இறக்குமதி செய்யும் (LNG BASED) துறைமுகமாக மேம்பாடுகள் செய்யலாம் எனவும் உத்தேசிக்கப்பட்டது.

மாநிலங்கள் தீவிரம்:-

இந்தியாவில் துறைமுகம் அமைக்க பூர்வாங்க அறிக்கைகள் பெறவும் அதன்பிறகு உள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால், வேறு பல மாநிலங்கள் கீழ்க்கண்ட புதிய பெருந்துறைமுகங்களைத் தாங்களே தங்கள் மாநிலங்களில் கட்டி எழுப்பியுள்ளனர்.

1.    குஜராத் மாநிலம்    முந்திரா துறைமுகம்

2.    ஆந்திரா மாநிலம்  1.காக்கிநாடா 2.கங்காவரம்  3. கிருஷ்ணபட்டிகை துறைமுகங்கள்.

3.    கேரளா மாநிலம்  விழிஞ்ஞம் துறைமுகம் கட்டப்பட்டு வருகின்றது.

4.    புதுச்சேரி மாநிலம்; 1.காரைக்கால் 2.புதுச்சேரி துறைமுகங்கள்.

5.    மேற்கு வங்காளம்    ஹால்டியா துறைமுகம்

6.    மகாராஷ்டிரா மாநிலம்    1. டிக்கி  2. ராவரா

போன்றவைகள் புதிய துறைமுகங்களாகும்.

                 தமிழக அரசு, துறைமுகம் அமைக்க சேது சமுத்திர கார்ப்பரேசனில் கொடுத்த அனுமதியை 10.10.2006ல் ரத்து செய்து உலக புகழ் பெற்ற துறைமுகங்கள் கட்டுமானம் செய்யும் நிறுவனங்களான துபாய் போர்ட் டிரஸ்ரே லார்சன் டியுப்ரோ கட்டுமான நிறுவனம், கிறியேடிவ் இன்பரோ பெடிரக்டர் டேவலப்பர், லாங்கோ இன்டர்டெக் லிமிடட் போன்ற நிறுவனங்களிடம் ஆய்வு அறிக்கை மற்றும் திட்ட அறிக்கைகள் தயாரித்து கொடுத்து கட்டுதல், இயக்குதல், ஒப்படைத்தல் (பி..டி) முறையில் செய்து முடிக்க ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் ஒப்படைக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு பெருகும்!

                      மேற்படி துறைமுகம் தன் முழு அளவு சிறப்பாக செயல்படும் காலத்தில் 7,000 தொழில் நுணுக்க வல்லுனர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன் மறைமுகமாக 15 இலட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு  மற்றும் பொருளாதார மேம்பாடு அளிப்பதுடன் 30,000 கோடி ரூபாய்களுக்கு மேல வெளிநாட்டு மூலதனம் துறைமுகம் மற்றும் சாலை, ரயில்வே பாதை மற்றும் தொழில்துறைகளில் முதலீடு செய்யப்படும். மாநில அரசு இதனை கவனிக்க தமிழக அமைச்சரவையில் தனியாக ஓர் அமைச்சருக்கு பொறுப்பு கொடுத்து திட்டமிடல் வேண்டும்.

                 நாகர்கோவில்திருவனந்தபுரம் ரயில் பாதையில் 10 கி.மீ. தூரத்தில் குளச்சல் கடற்கரை பகுதி இனையம் உள்ளது. இதனை ரயில் பாதையுடன் இணைக்க மலேசியன் துறைமுக கட்டிட கம்பெனி 01.12.2006ல் திட்டம் தயாரித்துக் கொடுத்துள்ளனர். ரயில்வே இலாகாவும் திட்டத்தை உடன் துவங்க தயாராக உள்ளனர். Port Connectivity Fund-லும் பணம் உள்ளது. அவர்களும் திட்டத்தை உடன் ஆரம்பிக்கத் தயாராக உள்ளார்கள். தமிழ்நாட்டில், சென்னையில் சென்னை துறைமுகம், எண்ணூர் துறைமுகம் மற்றும் கட்டப்பள்ளி துறைமுகம் உள்ளன. விழிஞ்ஞம் துறைமுகம் இங்கிருந்து 38 கி.மீ.தூரத்தில், கேரளா மாநிலத்தில் அமைந்து உள்ளது. இந்த துறைமுகங்களை 2013, 2014-ம் ஆண்டுகளில் லார்சன் அன்ட் டியூபரோ துறைமுக கட்டுமான கம்பெனியே கட்டியுள்ளது. இதனால் அந்த பகுதி முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக அந்த பகுதி மீனவ மக்கள் எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதை நேரில் பார்வையிட்டால் தெரியவரும். ஏதாவது ஒரு தொழிலுக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்வது தவிர்க்கப்பட்டு உள்@ரிலே பலவிதமான வேலை வாய்ப்புகள் உருவாகும்.

கப்பல் கட்டும் தொழில்

                        குளச்சல்இனயத்தில் துறைமுகம் அமையுமானால் கப்பல்கட்டும் துறையிலும் சிறு ஓடங்கள் தயாரிப்பது போன்று, பெரிய கப்பல்களை நம் உள்@ரிலே தயாரிக்கவும், பழுது பார்க்கவும் கப்பல் கட்டும் நிறுவனங்கள் புதிதாக உருவாகும் மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் அளவிற்கு வேலைவாய்ப்புகள் பெருகும். நமது மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்ஏற்கனவே இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள எந்த துறைமுகத்தாலும் தடுப்புச்சுவர் அமைத்ததால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றது.

அந்நியச் செலவாணி

                        குளச்சல் இனயம் துறைமுகத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவின் மேற்குக்கரை மற்றும் கிழக்குக்கரை துறைமுகங்களுக்கு இடையே, குளச்சல் இனயம் துறைமுகம் இடைநிலை துறைமுகமாக செயல்படும். எனவே, இலங்கை நாட்டின் கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் இந்தியாவின் அனைத்து அந்நியச் செலாவணி மிச்சமாகும்.

பயப்பட வேண்டாம்

                     குளச்சல் துறைமுகத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது முற்றிலும் தவறானது. தூத்துக்குடி, சென்னை, கொச்சி போன்ற முக்கிய துறைமுகங்களை ஒட்டியுள்ள அனைத்து ஊர்களிலும், மீனவர்கள், மீன்பிடித் தொழிலை செய்கின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு மாபெரும் திட்டம் செயல்படுத்தப்படும்போது, அதில் உருவாகும் வேலைவாய்ப்புகளில், அப்பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது வழக்கம். குளச்சல் துறைமுகம் சர்வதேச துறைமுகமாக மலர்வதால், மீனவ மக்களுக்கு சிறந்த எதிர்காலம் அமையும். குடிசைகளில் வாழும் மக்கள், மாளிகைகளில் வாழும் நிலை ஏற்படும். எவ்வாறு கேரள மாநிலத்தின் கொச்சி துறைமுக நகரம், கேரளாவின் பொருளாதார நகரமாக தற்பொழுது விளங்குகிறதோ, அதுபோல குளச்சல் இனயம் துறைமுகத் திட்டத்திற்குப்பின், குளச்சல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் விளங்கும். வருங்காலத்தில், இந்தியாவின் மற்ற அனைத்து மாவட்டங்களையும் விட பொருளாதாரத்தில் தலைசிறந்த மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் உருவெடுக்கும். நமது நாடும் முன்னேறும், நாமும் முன்னேறுவோம். எனவே, மக்கள் நலனுக்காக மத்திய கப்பல் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், மாவட்ட மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று  நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில்   தெரிவித்துள்ளார்.

 

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.