+2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால், +2 தேர்வை ரத்து செய்து விடலாமா?

Published:

prof-srinivasan-madurai
prof-srinivasan-madurai
  • ப்ளஸ் டூ மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால், ப்ளஸ் டூ தேர்வை ரத்து செய்து விடலாமா…?
  • அருப்புக்கோட்டையில் பாஜக பொது செயலாளர் சீனிவாசன் பேட்டி ..

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

நீட் தேர்வு கூடாது என்று நினைக்கும் அரசியல் சக்திகளான திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் தற்போதைய சூழ்நிலையை அரசியல் பிரச்சினையாக மாற்றுகின்றனர்.

நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியது தான் சாக்கு என்பது போல, மாணவர்கள் தற்கொலையை வைத்து, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.
இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு பாஜக சார்பில் இரங்கல் தெரிவிப்பதாகவும், அவர்களின் துக்கத்தில் பாஜக பங்கு கொள்வதாகவும் கூறினார்.

மேலும்ப்ளஸ்டூ தேர்வை எதிர் கொள்ள தயங்கி, மாணவர்கள் தற்கொலை கொண்டால் ப்ளஸ்டூ தேர்வையும் தடை செய்து விடுவார்களா எனக் கேட்டார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது இன்னும் உறுதியாக வில்லை, அவர் கட்சி ஆரம்பித்தால் வாழ்த்துகள் தெரிவிப்போம்.

திரைத்துறையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவதற்கும், அரசியல் கருத்துக்களை கூறுவதற்கும் வரவேற்பு அளிக்கும் கட்சி பாஜக. சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் எப்பொழுதும் பாஜகவுக்கு எதிராகவே கருத்துகளை கூறி வருகின்றனர்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

சூர்யா நல்ல நடிகர், சூர்யா திரைப்படத்தில் நடிப்பதோட நிறுத்திக்கொள்ள வேண்டும். அரசியலில் நடிக்கக்கூடாது, அவருக்கு நீட் தேர்வு பற்றி என்ன தெரியும், எந்த ஒரு அரசியல் கருத்தையும் கல்வியில் புகுத்தி கூறக்கூடாது.

அப்படி அரசியல் கலந்து கூறினால் அது தவறான செயல். சூர்யா பேசி வரும் கருத்துக்கள் மாணவர்களின் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் குறைக்கும் வகையில் உள்ளது. அதனை சூர்யா தவிர்க்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கூறினார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img