அயோத்தி சர்ச்சைக்குரிய கட்டட இடிப்பு வழக்கு: செப்.30ல் தீர்ப்பு!

அடடே... அப்படியா? இந்தியா
advani-mm-joshi-umabharati
advani-mm-joshi-umabharati

சர்ச்சைக்குரிய அயோத்தி கட்டடம் இடிக்கப்பட்ட வழக்கில் வரும் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 

கடந்த 1992ம் ஆண்டு டிசம்பரில்  உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த சர்ச்சைக்குரிய கட்டடம் ஒன்று இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜக., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, வினாய் கட்டியார் உள்பட 32 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

இவர்களில்  அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியேரை அலகாபாத் உயர் நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்து 2001ல் உத்தரவிட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை ஆக. 31க்குள் முடிக்க சிபிஐ.,க்கு அறிவுறுத்தியது.

இதை அடுத்து சி.பி.ஐ. தினசரி இந்த வழக்கை விசாரித்தது.. இந் நிலையில், இந்த வழக்கில் தொடர்பு உடையவர்களாகக் குற்றம் சாட்டப் பட்டிருந்த பாஜக., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் கடந்த ஜூலை 24 மற்றும் 24-ம் தேதிகளில் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், ஆஜராகி . நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் முன் வாக்குமூலம் அளித்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

ayodhya 1
ayodhya 1

இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் 351 சாட்சிகளும், 600க்கும் மேற்பட்ட ஆவண ஆதாரங்களைளும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அன்று  எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, வினய் கட்டியார்  உள்ளிட்ட 32 பேரும் நேரில் ஆஜராகுமாறு கூறப் பட்டுள்ளது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.