ஒரே படுக்கை… இரண்டு பெண்கள்! நெல்லூர் அரசு மருத்துவமனையின் அவலம்!

Published:

nellore-gh-two-women-in-a-bed
nellore-gh-two-women-in-a-bed

நெல்லூர் அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கை மீது இரு தாய்மார்கள்.

நெல்லூர் அரசாங்க மருத்துவமனையில் பிரசவம் மற்றும் சிறு குழந்தைகளுக்கான பிரிவில் குழப்பமான சூழல் நிலவுகிறது. பிரைவேட் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதால் பிரசவத்திற்காக அதிக எண்ணிக்கையில் பெண்கள் இங்கு வந்து சேருகிறார்கள்.

ஆனால் கர்ப்பிணிகளுக்கும் குழந்தை பெற்றவர் களுக்கும் 250 படுக்கைகளும் குழந்தைகளுக்கு 70 படுக்கைகளும் மட்டுமே இங்கு உள்ளன. பிரசவம் செய்த இரு தாய்களையும் அவர்களின் பிறந்த குழந்தை களையும் ஒரே படுக்கையில் படுக்க வைக்கிறார்கள்.

இங்கு படுக்கை குறைபாடு மிக அதிகமாக உள்ளது. ஒரே படுக்கையில் அவர்கள் அப்போதைய பிறந்த குழந்தைகளோடு படுப்பது கஷ்டமாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

அதுவும் இந்த கொரோனா நேரத்தில் இவ்வாறு படுத்திருப்பதன் ஆபத்தை அங்கு வந்து சேர்ந்திருக்கும் தாய்மார்கள் உணர்ந்து மிகவும் வருத்தத்தில் உள்ளார்கள். வருத்தமளிக்கும் இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img