காவல் துறையில் பெண்களுக்கு முக்கியத்துவம்: மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு

குர்கான்:

காவல் துறை மற்றும் துணை ராணுவத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

குர்கானில் நடைபெற்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படை பெண்கள் பிரிவின் 7வது தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியபோது…

இந்திய வரலாற்றில் பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு இணையாகவும், ஆண்களைவிட கூடுதலான முக்கியத்துவத்தையும் பெண்கள் பெற்றுள்ளனர். நம் கலாசாரத்தில் பெண்கள் தெய்வமாக மதிக்கப்படுகிறார்கள். அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல் வலுவான இந்தியாவை உருவாக்க முடியாது. நம் நாட்டில், போலீஸ் துறையில், பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், இந்த நிலை, விரைவில் மாறும். போலீஸ் துறையிலும், துணை ராணுவப் படையிலும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதில், பா.ஜ., அரசு உறுதியாக உள்ளது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலர் பணியில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடும், எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட துணை ராணுவப்படைகளில் பெண்களுக்கான 15% இடஒதுக்கீடும் விரைவில் உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Inaugurated a National Conference on Women in Police organised at Gurgaon in Haryana today. The women’s representation…

Posted by Rajnath Singh on Wednesday, January 6, 2016