இடஒதுக்கீடு என்பது தலித்துக்கு திமுக போட்ட பிச்சை. ஊடகத்தினர் தவறான தொழில் செய்கிறார்கள். பார்ப்பன நாய், வடஇந்தியர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்பது தொடங்கி பலரை மிகக் கடுமையான வார்த்தைகளால் ஆர்.எஸ் பாரதி விமர்சனம் செய்தார். இது தொடர்பாக பலத்த சர்ச்சை ஏற்பட்டது.
பத்திரிகையாளர்கள் – செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் மீது அநாகரீக வார்த்தைகளில் அவதூறு செய்த திமுக அமைப்புச் செயலாளர் #ஆர்எஸ்பாரதி யின் வரம்புமீறிய பேச்சுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
பார்ப்பன நாய் என்று சாதியை இழிவுபடுத்தி பொது இடத்தில் பேசியதற்காக, அவருடைய தெலைபேசியில் தொடர்பு கொண்டு, ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்கத்தின் சார்பில் கோவை ராமநாதன் என்பவர் கடும் கண்டனம் தெரிவித்து, அவ்வாறு பேசிய குரல் பதிவை சமூகத் தளங்களில் பதிவிட்டார். மேலும் பலரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஊடகத்தினர் அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக., அதிமுக., என கட்சிகளும் ஆர்.எஸ் பாரதி கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் ஆர்.எஸ் பாரதி ஊடகங்கள் குறித்த தன் பேச்சுக்கு மட்டும் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில், நான் எந்த உள்நோக்கத்தோடும் பேசவில்லை. நான் தவறாக சொல்லவில்லை. யாரையும் தனிப்பட்ட வகையில் பேசவில்லை. சில ஊடகங்களைதான் தாக்கினேன். உண்மையை சொல்லிவிட்டு, அதன்பின் அதை வேறு விஷயத்தோடு தொடர்புபடுத்தி பேசினேன். இதனால் உங்களுக்கு காயம் ஏற்பட்டு இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் என்னிடம் பேசினார். என்னிடம் இது தொடர்பாக ஸ்டாலின் வருத்தம் தெரிவித்தார். நானும் இதை தவறு என்று உணர்ந்து கொண்டேன், அதனால் வருத்தம் தெரிவிக்கிறேன் என்றார்.
பெரியார் குறித்தும் திராவிட இயக்கங்கள் குறித்தும் பாஜகவின் எச்.ராஜா போன்றவர்கள் விமர்சிப்பதை பார்த்து மனம் தாங்காமல் ஒரு சில வார்த்தைகள் பேசினேன், அந்த வார்த்தைகள் யாருக்கும் மன வருத்தத்தையோ, கஷ்டத்தையோ கொடுத்து இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்… என்று கூறினார். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட சாதியை முன்வைத்து நாய் என்றெல்லாம் பேசிவிட்டு எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கடந்து போனார்.
ஆதிதிராவிடர்கள் நீதிபதியாக உள்ளார்கள் என்றால் அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று, தி மு க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியது சமூகத் தளங்களில் பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. அதனால் தான் திமுக., திக., உள்ளிட்டவர்களுக்காக அவ்வாறு பிட்சை இடப்பட்டு நீதிபதி பதவி பெற்றவர்கள் விசுவாசிகளாக செயல்பட்டார்களா என்று சமூகத் தளங்களில் கேள்விகள் முன்வைக்கப் பட்டன.
இந்து தெய்வங்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் எவ்வளவுதான் கீழ்த்தரமாக திராவிட இயக்கத்தின் தலைவர்கள் முதல் பலரும் பேசியும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நீதிமன்றம் சொகுசாக அவர்களை விடுவிப்பதிலும், அதே நேரம் ஈவேரா எதிர்ப்புக் கருத்து தெரிவிப்பவர்கள், சிலைக்கு அவமரியாதை செய்பவர்களை தண்டிப்பதிலும் இருந்தே, திமுக., போட்ட பிச்சை என்பது நன்றாகத் தெரிகிறதே என்று சமூகத் தளங்களில் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சை மேற்கோள் இட்டு பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், பிச்சை என நான் குறிப்பிட்டது கொடை என்பது அர்த்தம்.. அது புரிந்து கொள்வதைப் பொறுத்தது… என்று சமாளித்தார் ஆர்.எஸ். பாரதி!