ஆதிதிராவிடர்களை நீதிபதியாக ஆக்கியது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று பேசியிருக்கிறார் ஆர்எஸ்.பாரதி..இது திமுகவிற்கு புதிதில்லை.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை மேடையில் வைத்துக் கொண்டே ஆதிதிராவிடர்,அருந்ததியினருக்கு நன்றியே இல்லை என்று பொன்முடி பேசினார் முன்பு. இவர்களுக்கு ஓட்டுப் போடாதவர்களுக்கு நன்றியில்லை, சோற்றாலடித்த பிண்டம் என்றெல்லாம் வசைபாடுவது எளிது அவர்களுக்கு.
ஆனால் இவர்களின் உளவியல் அதிதீவிரமான ஜாதிய வாதத்தால் நிரம்பியது.இது சமதர்மத்தை நம்புகிறவர்களின் பேச்சல்ல.எப்போதுமே ஒரு வாதம் வைப்பார்கள் பெரியார் உயர் ஜாதியை சேர்ந்தவர் அவருக்கு ஒடுக்கு முறையே கிடையாது ஆனால் பட்டியல் பிரிவு மக்களுக்காக போராடினார் என்று சொல்வார்கள்.இது அடிப்படையிலேயே பொய்.
பிராமணர் அல்லாத உயர்ஜாதியினரின் நலனையும்,அதிகாரத்தையும் காப்பாற்ற உருவானதே நீதிக்கட்சி.அதனுடைய நீட்சிதான் திராவிட இயக்கமும்.தங்கள் லாபத்திற்கு ஒரு கருவியாக பட்டியல் பிரிவு மக்களை பயன்படுத்தினார்களே ஒழிய அவர்களுக்கு உரிய இடத்தை தரவில்லை.தந்தாலும் நான் உனக்கு பிச்சையாக போட்டேன் பார்த்தாயா? என்ற ஆணவப்பேச்சு மட்டும்தான் வெளியே வரும்.
சமூகநீதியே இல்லை என்று இவர்கள் சொல்கிற உத்திர பிரதேசத்தில் மாயாவதியை பாஜகவே ஆதரித்தது முதலமைச்சர் ஆக.இதோ கர்நாடகா,ஆந்திராவில் கூட துணை முதல்வர்கள் வந்துவிட்டார்கள்.ஆனால் இன்று சமூகநீதி இயக்கம் என்று சொல்லும் திமுக அவர்களில் ஒருவரை கட்சி பொது செயளாளர் ஆக்குவார்களா?
இன்று நாட்டின் ஜனாதிபதியை பட்டியல் பிரிவில் இருந்து கொண்டு வந்திருக்கிறோம் என்பதை Claim கூட பாஜக செய்யவில்லையே? இதுதானே சமதர்மத்தை ஆழ நினைப்பவர்களுக்கான அடையாளம்.
ரவிக்குமார் 2015 ல் கேட்டார் தலித்துகளின் வாக்குகளை பெற்றுக் கொண்டு பாஜகவுக்கு நன்றியே இல்லை அவர்களுக்கு நல்லது செய்ய என்று.அதன் பின்னால் SC/ST சட்டத் திருத்தத்தில் பாஜக சட்டப்பாதுகாப்பை உறுதிப் படுத்தியது.
ஆனால் அதற்காக ரவிக்குமார் நன்றி செலுத்தவில்லை அதை அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை என்பது வேறு.இப்போது நாங்கள் போட்ட பிச்சை என்று ஆணவத்துடன் பேசுகிறாரே ஆர்எஸ் பாரதி இதை எதிர்த்து கேட்க திராணியுள்ளதா திரு.ரவிக்குமாருக்கு? அதே போல,அல்லது உண்மைதான் என்று பெருமையோடு ஏற்கப்போகிறாரா?
சரி, அம்பேத்கர் போட்ட பிச்சையில்தான் நான் வக்கீலானேன் என்று பேசுவாரா ஆர்எஸ் பாரதி? ஆனால் மோடி பேசினாரே அம்பேத்கர் போட்ட பிச்சையில்தான் நான் பிரதமர் ஆனேன் என்று.அவர்தான் இடஒதுக்கீட்டால் எனக்கான பங்கீட்டை உறுதி செய்தார் என்று.
- சுந்தர்