பெரிய பாண்டியன் நினைவுநாள்! பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கல்!

சற்றுமுன் நெல்லை
periya pandian wife banurekha - 2026

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மூவிருந்தாளி சாலைப்புதூரைச் சேர்ந்தவர் பெரியபாண்டியன்.

இவர் சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். சென்னையில் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற போது சுட்டுக்கொல்லப்பட்டார் பெரியபாண்டியன்்.

இன்று அவரது முதலாவது நினைவு நாளில் அவரது குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 26 குழந்தைகளுக்கு பெரியபாண்டியன் குடும்பத்தின் சார்பாக பள்ளி சீருடை வழங்கப்பட்டது..

1 thought on “பெரிய பாண்டியன் நினைவுநாள்! பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கல்!”

  1. ஆஹா நல்ல விஷயம் வாழ்த்துக்கள் மேடம். இது தான் சரியான விஷயம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.