உரிமை கேட்டுப் போராடிய தலித் மக்கள் மீது தமிழக காவல்துறையினர் தாக்குதல் நடத்துவதா ? : வைகோ

தலித் மக்கள் மீது தமிழக காவல்துறையினர் தாக்குதல் நடத்தி இருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிடுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகில் உள்ள திருநாள் கொண்டச்சேரி என்ற ஊரில் 40 தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் எவராவது இறந்து போனால் 3 கி.மீ. தூரத்தில் உள்ள கடலாழி ஆற்றங்கரைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டும். இதற்கு பாதை வசதி இல்லாததால், வயல் வரப்பு வழியாகத்தான் உடலைத் தூக்கிச் செல்ல வேண்டும்.
 
கடந்த நவம்பர் 26 ஆம் தேதி திருநாள் கொண்டச்சேரியில் குஞ்சம்மாள் (வயது 80) என்பவர் இறந்தபோது, உடலை வழுவூர் பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல முயன்றனர். அதற்கு அங்கு வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
 
இதனால் பதற்றமான சுழல் உருவாகி, காவல்துறை குவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. வழுவூர் மக்களின் எதிர்ப்புக்கு பணிந்த அரசு அதிகாரிகள், வயல் வரப்பு தனிப்பாதை வழியாக கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
 
இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதி குஞ்சம்மாளின் கணவர் செல்லமுத்து (வயது 85) இறந்து போனார். இவரது உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வழியில்லாததால் வீட்டிலேயே உடலை வைத்திருந்தனர். மறைந்த செல்லமுத்துவின் பேரன் கார்த்திகேயன், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், செல்லமுத்து சடலத்தை வழுவூர் பொதுப்பாதை வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறை முழு பாதுகாப்பு தர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
 
ஆனால், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செல்லமுத்து உடலை வழுவூர் பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் தனிப்பாதையில் கொண்டுபோக வேண்டும் என்று அரசு அதிகாரிகள் வற்புறுத்தினர். இதனை ஏற்க முடியாது என்று செல்லமுத்து உறவினர்களும், திருநாள் கொண்டச்சேரி மக்களும் போராட்டம் நடத்தியபோது, ஐநூறு காவல்துறையினர் சூழ்ந்து கொண்டு, வழுவூர் பொதுப்பாதை வழியாக சடலத்தை கொண்டுபோக முடியாமல் தடை செய்தனர்.
 
மயானப் பாதை உரிமை கேட்டுப் போராடிய தலித் மக்கள் மீது தமிழக காவல்துறையினர் தாக்குதல் நடத்தி இருப்பதும், உயர்நீதிமன்ற உத்தரவை அலட்சியம் செய்து, செல்லமுத்துவின் உடலை வலுக்கட்டாயமாக தனிப்பாதையில் எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ள அரசு அதிகாரிகளின் செயலும் வன்மையான கண்டனத்துக்கு உரியது.
 
தலித் மக்களின் மயானப் பாதை உரிமையை பறித்தது மட்டுமின்றி, உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய அரசு அதிகாரிகள் மீதும், தலித் மக்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என்று வெளியிடுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .
ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories