108 ஆம்புலன்ஸ் சேவை கே.ஆர் .பி.பிரபாகரன் எம்.பி துவங்கி வைத்தார்

பாவூர்சத்திரம் அருகே பாராளுமன்ற உறுப்பினரின் லட்சிய கிராமமான  பெத்தநாடார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மகிழ்வண்ணநாதபுரத்தில் 108  ஆம்புலன்ஸ் சேவையை  கே.ஆர் .பி.பிரபாகரன் எம்.பி கொடியசைத்து துவக்கி வைத்தார்
திருநெல்வேலி மாவட்டத்தில் 108  ஆம்புலன்ஸ்கள் மொத்தம் 25  உள்ளது தற்போது கே.ஆர் .பி.பிரபாகரன் எம்.பி  முயற்சியில் பாவூர்சத்திரம், கீழப்பாவூர்  சுற்று வட்டார பொதுமக்களின்  கோரிக்கையினை ஏற்று தற்போது பாவூர்சத்திரத்தில் மக்கள் அவசர காலங்களில் பயன்படும்  வகையில்  பாவூர்சத்திரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில்  108  ஆம்புலன்ஸ் நிறுத்தபடுகிறது  ,பாவூர்சத்திரம் பகுதியில் ஆம்புலன்ஸ் இருப்பதால் பாவூர்சத்திரம் ,கீழப்பாவூர்,ஆவுடையானூர்,அடைக்கலப்பட்டிணம்,உட்பட சுற்றுவட்டார  இதைப் பயன்படுத்தி கொள்ளலாம்
இதுகுறித்து கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி.கூறியதாவது
கீழப்பாவூர்  ,பாவூர்சத்திரம் சுற்று வட்டார பொதுமக்களின்  அவசர கால உதவிக்கு 108  ஆம்புலன்ஸ்  தேவை என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது இது குறித்து என்னிடம் கோரிக்கை வைத்தனர் மேலும் , இப்பகுதி தேசிய நெடுஞ்சாலையில் என்பதால் அடிக்கடி விபத்து ஏற்ப்படுகிறது  சில இடங்களில்  வாகன விபத்து நடைபெற்ற போது அந்த இடத்தில் இருந்த நான் ஆம்புலன்சிற்கு சொல்லி ஆம்புலன்ஸ் வரும் வரை இருந்து அவர்களை காப்பற்றியுள்ளேன் ஆனால்  இப்பகுதியில் ஆம்புலன்ஸ்  இல்லாததால் வர தாமதமானது இதுகுறித்து சுகாதாரதுறை அமைச்சரிடம் தெரிவித்தேன்  தற்போது தமிழக முதல்வரின் உத்தரவின் தற்போது இங்கு ஆம்புலன்ஸ் செயல்பாட்டுக்கு வந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு  ஒரு வேண்டுகோளை இந்த நேரத்தில் முன் வைக்கிறேன் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டால் முதலில் வழி விட்டு ஒதுங்கி செல்லுங்கள் ஒரு உயிரை காப்பற்றிய பெருமை உங்களைச் சாரும் என்றார் மேலும் ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்சில் சிகிச்சைக்கு வரும் நபர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று  எடுத்துக் கூறினார்

108  ஆம்புலன்ஸ்   சேவை குறித்து அதிகாரிகள் கூறியதாவது
பிரசவ வலியின் போது பெண்கள் உடனடியாக ஆட்டோ பிடித்து மருத்துவமனை செல்கின்றனர் பொதுவாக பெண்கள் பிரசவவலி வரும் நேரத்தில் ஆட்டோவில் உட்கார்ந்து செல்வது பாதுகாப்பனது அல்ல ஆம்புலன்ஸ்ல்  படுக்கை வசதி உள்ளது மேலும் சிலருக்கு ஆம்புலன்சில் குழந்தையும் பிறந்துள்ளது 108   போதுமான வசதி உள்ளது அவசர காலங்களில் இச்சேவையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் முன்பு ,கீழப்பாவூர் ,பாவூர் சத்திரம் பகுதில் இருந்து அழைப்பு வந்தால் தென்காசி அல்லது சுரண்டையில் இருந்துதான் வரவேண்டும் தற்ப்போது பாவூர்சத்திரத்தில் இருப்பதால் அழைப்பு வந்த 10 நிமிடத்திற்குள் அப்பகுதியை அடைந்து விட முடியும் என்றார்
நிகழ்சியில் மாவட்ட கவுன்சிலர் சேர்மபாண்டியன் ,பெத்தநாடார் பட்டி பஞ்சாயத்து தலைவர் இராதா  வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா,   108 மாவட்ட மேலாளர் மஹமது சாதிக் ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆழ்வார், லிங்கத்துரை,மேலவைப் பிரதிநிதி கணபதி,ஊராட்சிசெயலர் மதனதுரை,கிளை செயலாளர்கள் அழகேசன்,கணேசன்,பி.எஸ்.என்.எல் ஆலோசனைக்குழு மதியழகன்,அம்மா பேரவை சாமிநாதன் ,மாயாண்டி,செல்லப்பா உட்பட பலர் கலந்துகொண்டனர்