குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட தமிழக காவல் துறையினர்!

 
சென்னை கோயம்பேடு பகுதியில் தமிழக காவல் துறையில் பணியாற்றும் 3 காவலர்கள் குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காவல் துறையில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் ரகளையில் ஈடுபட்ட குடிகாரக் காவலர்களை பொதுமக்கள் பலர் தட்டி கேட்டதிற்கு அவர்கள் அதிகார தோரணையில்அநாகரீகமான வார்த்தைகளால் பொதுமக்களைத் திட்டியதாகக் கூறப்படுகிறது.
நடைபெற்ற சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் அந்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்து குடிகாரக் காவலர்கள் மூன்று பேரையும் பத்திரமாக பொதுமக்களிடம் இருந்து மீட்டு சென்றனர்.
அப்போது தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலர்களே ரகளையில் ஈடுபட்டு காவல் துறைக்கு மிகவும் பெருத்த அவமானத்தை ஏற்படுத்துவது வெட்கக்கேடானது என பொதுமக்கள் காவல் துறையை திட்டித் தீர்த்தனர்.
மேலும் தமிழக காவல் துறையில் பணியாற்றும் ஊழியர் பெரும்பாலானோர் பணி நேரத்திலும் குடிபோதையில் உள்ளதாகவும், அவர்களை யார் தட்டிக் கேட்கமுடியும்? அவர்கள் மீது யாராவது நடவடிக்கை எடுக்க முடியுமா? என பொதுமக்கள் புலம்பிக் கொண்டு உள்ளனர் .
அரசாங்கப் பணியில் பணியாற்றுபவர்கள் பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து குற்ற செயல்களில் ஈடுபடும்போது அந்த கருப்பு ஆடுகள்மீது துறைரீதியான நடவடிக்கை எனும் பெயரில் பேருக்காக உடனடி நடவடிக்கை எனும் பெயரில் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்வதை அரசாங்கம் முதலில் ரத்து செய்யவேண்டும்.
மாறாக அந்த கருப்பு ஆடுகள்மீது சட்டரீதியாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். மேலும் குற்ற செயலில் ஈடுபட்டவரின் வழக்கு நீதிமன்றத்தில் முடிந்து தீர்ப்பு வரும் வரை அவரை அரசாங்கப் பணியில் அமர்த்தக் கூடாது.
நீதிமன்றத்தில் அவர்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் அந்த கருப்பு ஆட்டை மீண்டும் அரசாங்கப் பணியில் பணியாற்ற முடியாதபடி அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
சட்டத்தின் முன் அனைவரும் சமமே.
அரசாங்கத்தில் பணியாற்றும் கருப்பு ஆடுகள் ஒன்றும் விதிவிலக்கு அல்ல !
குடிபோதையில் ரகளை செய்த காவலர்கள் மூன்று பேரையும் பத்திரமாக பொதுமக்களிடம் இருந்து மீட்டுச் சென்றபோது எடுக்கப்பட்ட காணொளி தற்போது வாட்ஸ் ஆப்பில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.