போலி இறப்பு சான்றிதழ் மூலம் கணவனின் சொத்தை மோசடி செய்த மனைவி, மகன் சிறையில் அடைப்பு !

 
சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (55). இவரது மனைவி டயானா பாபு (53), மகன் சாம்சன் நிர்மல் குமார் (24). கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிறிஸ்துதாசுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனையை தனது கணவர் இறந்து விட்டதாக டயானா பாபு போலியான இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழை தயார்செய்து வேறு ஒருவருக்கு டயானா பாபுவும், அவரது மகனும் விற்பனை செய்து விட்டனர்.
மேற்படி விபரத்தை கேள்விப்பட்டு கிறிஸ்துதாஸ் அதிர்ச்சி அடைந்து சென்னை காவல் ஆணையாளரிடம் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் லலிதா லட்சுமி தலமையிலான காவல் துறையினர் கணவன் உயிரோடு இருக்கும் நிலையில் இறந்து விட்டதாக போலி ஆவணம் தயார் செய்து மோசடி செய்த மனைவி டயானா பாபு, சாம்சன் நிர்மல் குமார் 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.