ஜல்லிக்கட்டு போட்டிக்காக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்‘கேவியட்’ மனு தாக்கல்

 
ஜல்லிக்கட்டு நடத்துவதை தடுக்க முடியாத வகையில் உச்ச கோர்ட்டில் தமிழக அரசு நேற்று ‘கேவியட்’ மனு தாக்கல் செய்தள்ளது
மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த வியாழக்கிழமையன்று ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதிக்கும் வகையில் ஒரு அறிவிக்கையை வெளியிட்டது.
இதனிடையே, விலங்குகள் நல வாரியம் மற்றும் ‘பீட்டா’ விலங்குகள் நல அமைப்பு ஆகியவை மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக தகவல்கள் வெளியானது.
இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்துவதை தடுக்க முடியாத வகையில், தமிழக அரசு சார்பில் நேற்று ‘கேவியட்’ மனு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசு வழக்கறிஞர் யோகேஷ் கன்னா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இந்த மனுவில் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஏதேனும் வழக்கு தொடரப்பட்டால் அந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசின் கருத்தை கேட்கவேண்டும். வழக்கு விசாரணையில் தமிழக அரசையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். தமிழக அரசு தரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டு உள்ளது.
கடந்த 2014–ம் ஆண்டு மே 7–ந் தேதி ஜல்லிக்கட்டு மீது தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனால் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. மேலும், வருகிற பொங்கல் பண்டிகையின் போதும் ஜல்லிக்கட்டு நடைபெறாது என்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஒருவிதமான பதற்றம் நிலவியது குறிப்பிடதக்கது