துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஒரு பாடலைப் பாடி விளக்கியுள்ளார் … இது அவசரமான உலகம் என்று !
பெரியகுளம் நகர்மன்ற முன்னாள் தலைவரும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரருமான ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப் பட்டுள்ளதாகவும் அவருடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் இணைந்து கையெழுத்து போட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், அண்ணனாக இருந்தாலும் தம்பியாக இருந்தாலும் கட்சிக்கு எதிராக செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். என்று கூறினார்.
மேலும் அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்ற பாடலை பாடி ஓ.ராஜா நீக்கம் பற்றி அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.