சித்த மருத்துவர் S.மனோகரன் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம் !

 
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த சித்த மருத்துவர் S.மனோகரன்
நியமனம் செய்யப் பட்டுளதாக அந்த கழகத்த்தின் நிறுவன தலைவரும், மருத்துவருமான சேதுராமன் அறிவித்துள்ளார்.
 
 
தஞ்சை மாவட்டம் பேராவூரணி நடேசகுணசேகர திருமண மண்டபத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் நேற்று (10-01-2016) அதன் நிறுவன தலைவரும், மருத்துவருமான சேதுராமன் தலைமையில் நடைபெற்றது.அந்த கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.தேவர், மாநிலப் பொருளாளர் எம்.கே.செந்தில் முன்னிலை வகித்தனர்.
 
நடை பெற்ற கூட்டத்தில் 896 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தேர்தல் பணிகள் குறித்து அனைத்து முடிவுகளையும் எடுக்க முழு அதிகாரம் அளிக்கும் வகையில் அந்த கழகத்த்தின் நிறுவன தலைவரும், மருத்துவருமான சேதுராமனுக்கு முழு அதிகாரம் அளிப்பது உள்ள்ளிட ஒன்பது பொது தீர்மானங்கள் பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
 
 
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவன தலைவரும், மருத்துவருமான சேதுராமன் மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் பேசியதாவது :-
 
 
எத்தனை பேர் அலைந்து, முதல்வர் பதவிக்குஆசைப்பட்டு எத்தனை சக்ரவீயூகங்கள் அமைத்தாலும் தமிழகத்தில் மீண்டும் முதல்வராகப் போவது புரட்சித் தலைவி தான்.
2016 தேர்தலில் தமிழக மக்கள் எழுதப்போகும் இந்த தீர்ப்பை யாராலும் மாற்றி எழுத முடியாது.அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் பத்தாண்டுகாலமாக தொடர்ந்து இருக்கிறது. இந்த முறை நமக்கு அங்கீகாரம் தரும் அளவுக்கு “அம்மா” கூடுதலாக தொகுதிகளைத் தருவார். அப்படி அவர் தந்து விடக்கூடாது என்தற்காக சில குள்ளநரிகள் நமக்கு எதிராக பல பொய்ப்புகார்களை ஊரெல்லாம் உளறிக்கொண்டு திரிகிறார்கள்.“டாக்டர் சேதுராமன் யார்” என்று புரட்சித் தலைவி அம்மாவுக்கு நன்கு தெரியும் பதவி ஆசைக்காக அலைபவன் இல்லை நான். பசும்பொன் தேவர் கொள்கைகளை லட்சியமாகக்கொண்டு நாம் செயல்படுகிறோம். புற்றீசல் போல நம் சமுதாய ஒற்றுமையைக் கெடுக்க சிலர் சதி செய்கிறார்கள்.
 
 
அத்தனை சதிகளையும் முறியடித்து மூவேந்தர் முன்னணிக் கழகம் புரட்சித் தலைவி “அம்மா”வின்ஆதரவோடு சட்டமன்றத்துக்குள் இந்த முறை நிச்சயம் செல்லும் மூன்று தொகுதியோ, ஐந்து தொகுதியோ எத்தனை தொகுதி என்பதை புரட்சித் தலைவி அம்மா தருகிறாரோ அதனைப் பெற நாம் தயார். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சாதனைகளை மக்களிடம் சொல்ல தமிழக முழுவதும் விரைவில் பிரச்சாரம் செய்ய உள்ளேன் என்று மருத்துவர் சேதுராமன் பேசினார்.மேலும் அருப்புக்கோட்டையை சேர்ந்த சித்த மருத்துவர் S.மனோகரன் நியமனம் செய்யப் பட்டுளதாக நடைபெற்ற கூட்டத்தில் அந்த கழகத்த்தின் நிறுவன தலைவரும், மருத்துவருமான சேதுராமன் த்துள்ளார்.
 
 
நடைபெற்ற இந்தப் பொதுக்குழு கூட்டம் ஏற்பாடுகளை தஞ்சை புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, இளைஞரணி மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் அயப்பன், பேராவூரணி ஒன்றியச் செயலாளர் கே.பி.கருணைக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.