தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெறும் : ஜெயலலிதா

 
தமிழகத்தில் சட்டமன்ற விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெறும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
14 மாதங்களுக்குப் பிறகு அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ராயபேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சி தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை வந்தார். அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் ஜெயலலிதா 6 மாவட்ட அ.தி.மு.க அலுவலகங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து தொண்டர்களிடையே உரையாற்றினார்
அப்போது ஜெயலலிதா பேசி யதாவது:-
 
தீய சக்திகளிடம் இருந்து அ.தி.மு.கவை காப்பாற்றி வருகிறேன். அ.தி.மு.க இன்னும் பல 100 ஆண்டுகள் மக்களுக்குக்காக பணியாற்றும்.சட்டசபை தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.வரும் சட்டமன்ற தேர்தலில். அ.தி.மு.க மகத்தான வெற்றி பெறும் என்று தொண்டர்களிடையே தெரிவித்தார்.