ஜல்லிக்கட்டு தடை விஷயத்தின் உண்மை நிலை உங்களுக்கே தெரியும் ! : பொன்.இராதாகிருஷ்ணன்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கொடுக்க மறுத்தது உச்ச நீதிமன்றம். இதனால் தென் மாவட்டங்களில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் நேற்று நடை பெற்ற ரயில்வே மேம்பால இணைப்புப் பால திட்டப் பணி களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்ற மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணனிடம் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவு குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கருத்து கேட்டனர். 

அதற்க்கு பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது :-
ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய அரசு மீது பலரும் விமர்சனம் செய்கிறார்கள். ஜல்லிக்கட்டு விஷயத்தின் உண்மை நிலை என்னவென்று பொது மக்களாகிய உங்களுக்கும், ஜல்லிக்கட்டு விளையாட்டு வீரர்களுக்கும் தெரியும் என அவர் கூறினார். மேலும் ஜல்லிக்கட்டுக்கு ஒட்டுமொத்தமாய் தடை கிடைக்க தமிழகத்தில் சில அமைப்புகள் முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.