பெட்ரோல் லிட்டருக்கு 32 காசுகள்; டீசல் 85 காசுகள் விலைக் குறைப்பு

புது தில்லி:

பெட்ரோல் லிட்டருக்கு 32 காசுகளும் டீசல் 85 காசுகளும் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்  குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தங்களது விருப்பத்திற்கு நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற, இறக்கத்தை அடுத்து 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

தற்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிக்ச் சந்தித்துள்ளன. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை இன்று குறைத்துள்ளன. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 85 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.