கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, நிகழ்ச்சி ஒனறில் பங்கேற்க வந்த போது அரசு அதிகாரியை தாக்கியதாக சமூக ஊடகங்களில் காணொளி வரைலாக பரவிவருகிறது
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தார் அம்மாநில காங்கிரஸ்.முதலமைச்சர் சித்தராமையா, அவரை சுற்றி மக்கள் கூட்டம் மொய்த்தது,
பாதுகாப்பு அதிகாரிகள் அவரை நெருங்க விடாமல் தடுத்தபடி வந்தனர். ஒரு கட்டத்தில் தன் மீது சிலர் நெருக்கியும், உரசியும் வருவதையறிந்து எரிச்சலடைந்த சித்தராமையா திடீரென ஒருவரை தாக்கினார்.
இது சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. தாக்கப்பட்டவர் பெல்லாரி மாநகராட்சி ஆணையாளர் பி.ஜி.ரமேஷ் என கூறப்படுகிறது. எனினும் அடிவாங்கியது தானில்லை என ரமேஷ் மறுத்துள்ளார். அடிவாங்கியது கட்சி தொண்டர் எனவும் செய்திகள் வெளியாகி வருகிறது.
இது குறித்து சித்தராமையா அவரது முகனூல் பதிவின் மூலம் தெரிவித்துள்ளதாவது :-
நான் யாரையும் தாக்கவில்லை. தொண்டர்களை பார்த்து கையசைத்தேன். என் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது. இதனை ஊடகங்கள் தவறாக சித்திரித்து வெளியிட்டுள்ளது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்



