ஐதராபாத் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி படிப்பு தலித் பிரிவு மாணவர் ரோகித் வெர்முலா தற்கொலை விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது டுவீட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-
மோடி அரசின் அரசியல்சாசன கடமை தலித்துகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வரையறுக்கப்பட்டது. மாறாக, மோடி அரசின் மந்திரிகள் ஐந்து மாணவர்களை சஸ்பெண்ட என்ற பெயரில் விலக்கி வைத்துள்ளனர்.
இது தற்கொலை அல்ல. இது கொலை. இது ஜனநாயகத்தின் படுகொலை. மோடிஜி முதலமைச்சரை பதவி நீக்கம் செய்துவிட்டு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்” என்று தனது டுவிட்டரில் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.



