பிரதமர் மோடி அலுவலகத்தில் உதவி செக்ஷன் அதிகாரி அந்தஸ்தில் பணியாற்றி வந்த 12 இளநிலை ஊழியர்கள், அங்கிருந்து விடுவிக்கப்பட்டு பல்வேறு மத்திய அமைச்சகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.அதே சமயத்தில், பிரதமர் அலுவலகத்தில் புதிதாக 16 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சகத்துக்கு 3 பேரும், வேளாண்மை, தகவல் ஒலிபரப்பு ஆகிய அமைச்சகங்களுக்கு தலா 2 பேரும், வர்த்தகம், உணவு, உயர் கல்வி, பெட்ரோலியம், சாலை போக்குவரத்து ஆகிய அமைச்சகங்களுக்கு தலா ஒருவரும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. ஆனால் மாற்றத்துக்கான காரணம் கூறப்படவில்லை



