காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணியின் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பறித்து அந்த பதவியை எம்.ஜான்ஸிராணிக்கு வழங்க கடந்த சில தினங்களுக்கு முன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரிந்துரை செய்தாக கூறப்படுகிறது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜனார்த்தன் துவிவேதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் ஒப்புதலின் பேரில் தமிழக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்படுவதாகவும் அந்த பதவிக்கு எம்.ஜான்ஸிராணி நியமிக்க பட்டுள்ளதாகவும் ஜனார்த்தன் துவிவேதி அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழக மகளிர் காங்கிரஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜான்சி ராணி (39), திண்டுக்கல் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார். இவர், நிலக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மறைந்த ஏ.எஸ். பொன்னம்மாளின் பேத்தி ஆவார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவராகவும் ஜான்சிராணி பொறுப்பு வகித்து வந்தார். தற்போது, சென்னை போரூரில் வசித்து வருகிறார்.
பொன்னம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, உடல்நலம் விசாரிப்பதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தொடர்பு கொண்டதன் மூலம், ஜான்சிராணிக்கு முக்கியத்துவம் கிடைத்தது. அதன் எதிரொலியாக, தற்போது மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி மகளிர் காங்கிரஸ் சார்பில் மகளிருக்கு அதிகாரமளித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளங்கோவனின் படத்தை சிறியதாக வைத்தது தொடர்பாக அவர் ஆதரவாளர்கள் விஜயதாரணியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மகளிர் காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தியின் பேனர்களையும் கிழித்து எறிந்தனர்.
இது தொடர்பாக நவம்பர் 27-ஆம் தேதி இளங்கோவனை நேரில் சந்தித்து, விஜயதாரணி புகார் தெரிவித்தார். அப்போது விஜயதாரணி யை இளங்கோவன் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து விஜயதாரணி தில்லியில் புகார் செய்தார். மகளிர் காங்கிரஸை சேர்ந்த சாந்தாஸ்ரீநி, மானசா ஆகியோர் காவல்துறையினரிடம் இளங்கோவனுக்கு எதிராகப் புகார் கொடுத்தனர். அதன் பின் சோனியா காந்தி, ராகுல்காந்தியின் உத்தரவின்பேரில் அந்தப் புகார் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிரடியாக நீக்கம் தொடர்பாக விஜயதாரணி செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது :-.
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், என் மீது நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் அநீதியாகும். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்னைத் தரக்குறைவாகப் பேசினார். என் பக்கம் உள்ள நியாயம் தொடர்பாக சோனியாகாந்தியிடம், ராகுல்காந்தியிடமும் நேரில் தெரிவித்தேன். காங்கிரஸ் கட்சியில் உள்ள பிற தலைவர்களும் எனக்கு ஆதரவாக மேலிடத்தில் பேசினர். ஆனால், எதற்காக என் மீது நடவடிக்கை எடுத்தனர் எனத் தெரியவில்லை.
சோனியாகாந்தியையும், ராகுல்காந்தியையும் நேரில் சந்தித்து, என் நீக்கம் தொடர்பாக விளக்கம் கேட்பேன். அவர்கள் சொல்லும் பதிலுக்கேற்பவே, என் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும். என்னைப் பதவியிலிருந்து நீக்கம் செய்தின் பின்னணியில் இளங்கோவன்தான் உள்ளார் என்றார்.
விஜயதாரணி நீக்கம் தொடர்பாக ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்க ள் கருத்து கேட்டதற்கு அவர் கூறியுள்ளதாவது :-.
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதாரணியை பதவியிலிருந்து நீக்கம் செய்ததால் இனி காங்கிரஸ் பொலிவுபெறும் என்றார்.


